Hardik Pandya:பயிற்சியில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்து - அதிருப்தி அடைந்த மோர்கல்! என்ன நடக்கும்?
வங்கதேச டி20 போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
வங்கதேச டி20 போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
தீவிர பயிற்சியில் ஹர்திக் பாண்டியா:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இச்சூழலில் தான் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது.
இதற்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இதனிடையே அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஹர்திக் பாண்டிய இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியில் கடைசியால கடந்த ஜூலை 28 ஆம் தேதி விளையாடி இருந்தார். இந்த சூழலில் தான் அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதிருப்தி அடைந்த மோர்கல்:
Bring out the speed guns, the pace battery has arrived! ⚡️⚡️#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/FM4Sv5E4s3
— BCCI (@BCCI) October 4, 2024
இதில் ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சை பார்த்து இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அதிர்ப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் களத்தில் நீண்ட நேரமாக விவாதித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹர்திக் பாண்டியா ஸ்டெம்பிற்கு மிக அருகிலே பந்து வீசி பயிற்சி எடுத்து உள்ளார்.
இது மோர்னே மோர்கலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மைதானத்தில் அதிகம் பேசாதா மோர்கள் ஒவ்வொரு முறையும் ஹர்திக் பாண்டியாவிடம் ஒவ்வொரு பந்து குறித்தும் விளக்காமாக பேசி இருக்கிறார். ஹர்திக்குடனான தனது பணியை முடித்த பிறகு, மோர்கல் தனது கவனத்தை இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் டி20 ஐ தொடருக்கான முதல் அழைப்பைப் பெற்ற புதிய வீரர்களான ஹர்ஷித் ராணா மற்றும் மயங்க் யாதவ் ஆகியோருக்கு பயிற்சி அளித்துள்ளார் என்று சொல்கிறது அந்த தகவல்.
இந்திய டி20 அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே , வாஷிங்டன் சுந்தர் , ரவி பிஷ்னோய் , வருண் சக்கரவர்த்தி , ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.