Jhulan Goswami record: மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் எட்டிய முதல் வீராங்கனை... ஜூலன் சாதனை
மகளிர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனைப்படைத்திருக்கிறார் ஜூலான் கோஸ்வாமி
மகளிருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் சர்வதேச தரவரிசை அடிப்படையில் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
இதுவரை இந்திய மகளிர் அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில், இரண்டில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. அதனை அடுத்து, நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய இந்திய பேட்டர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
ஓப்பனர் ஸ்மிரிதி மந்தானா (35), ரிச்சா கோஷ் (33) தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், 36.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது இந்திய அணி. எளிதான இலக்கை சேஸ் செய்து களமிறங்கி இருக்கும் இங்கிலாந்து அணி, கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிவிட்டது.
ஆனால், இந்த போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் விஷயம் என்னவென்றால், இந்திய பவுலர் ஜூலான் கோஸ்வாமி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை எடுத்து புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறார்.
Milestone 🚨 - 250 wickets in ODIs for @JhulanG10 👏👏#CWC22 pic.twitter.com/g0f1CqT3Sl
— BCCI Women (@BCCIWomen) March 16, 2022
அதுமட்டுமின்றி, மகளிர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்துவீச்சாளராக சாதனைப்படைத்திருக்கிறார். மேலும், அதிக விக்கெட்டுகள் எடுத்த மகளிர் வரிசையில் ஜூலான் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 250 விக்கெட்டுகளுடன் ஜூலன் முதல் இடத்திலும், 180 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலியாவின் கேத்ரின், வெஸ்ட் இண்டீஸின் அனிசா இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திலும், 168 விக்கெட்டுகளுடன் தென்னாப்ரிக்காவின் ஷப்னிம் நான்காம் இடத்திலும், 164 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்தின் கேத்ரின் ப்ர்ண்ட் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்