HBD Smriti Mandhana: பர்த்டே கேர்ள்.. இந்திய அணியின் லேடி சூப்பர் ஸ்டார்! ஸ்மிருதி மந்தனாவின் சாதனைகள்
Smriti Mandhana: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவர் தன்னுடைய 28 வது பிறந்த நாளை இன்று (ஜூலை 18) கொண்டாடுகிறார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவர் தன்னுடைய 28 வது பிறந்த நாளை இன்று (ஜூலை 18) கொண்டாடுகிறார். இந்திய அணியின் முக்கியமான வீராங்கனைகளில் ஒருவரான ஸ்மிருதி மந்தனாவின் சாதனைகள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்ப்போம்:
நட்சத்திர வீராங்கனை:
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவைப்போல் ஸ்மிருதி மந்தனா மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரின் பெயர்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிந்த பெயர்கள் தான். அந்த வகையில் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு சமமான இடத்தை மகளிர் கிரிக்கெட் அணியும் சமீப காலத்தில் பிடித்திருக்கிறது.
இதற்கான முக்கிய காரணங்களில் ஒருவர் ஸ்மிருதி மந்தனா. இடது கை பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனா இந்தியாவின் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஆவார். 2017 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இவர் இரண்டு சதங்கள் அடித்திருந்தார். ஸ்மிருதி மந்தனா 18 ஜூலை 1996 அன்று மும்பையில் பிறந்தார்.
இவரது தந்தையின் பெயர் ஸ்ரீனிவாஸ் மற்றும் தாயார் பெயர் ஸ்மிதா. இவருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார், அவருடைய பெயர் ஷ்ரவன் மந்தனா. மந்தனாவுக்கு இரண்டு வயதாக இருந்தபோது, அவரது முழு குடும்பமும் சாங்லியில் உள்ள மாதவ் நகருக்கு குடிபெயர்ந்தது.
ஸ்மிருதி மந்தனாவின் கல்வி:
மாதவ்நகரிலேயே ஆரம்பக் கல்வி கற்ற ஸ்மிருதி, சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் தன் சகோதரனுடன் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார். அப்போது இவரது சகோதரர் 15 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடி வந்தார். தனது சகோதரரின் வழியைப் பின்பற்றி, தனது சொந்த ஆர்வத்தைத் தொழிலாகக் கொள்ள முடிவு செய்த ஸ்மிருதி மந்தனா, தொழில் ரீதியாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார், மேலும் 11 வயதில், ஸ்மிருதி மந்தனா 19 வயதுக்குட்பட்ட அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஸ்மிருதி மந்தனாவின் வாழ்க்கை:
ஸ்மிருதி மந்தனா 2013ஆம் ஆண்டு உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பெண் வீராங்கனை என்ற பெருமை பெற்றார். 2016 இல், பெண்கள் சேலஞ்சர் டிராபியில் இந்தியா ரெட் அணிக்காக மூன்று அரை சதங்களை அடித்தார்.
ஸ்மிருதி மந்தனாவின் சாதனைகள்:
- ஸ்மிருதி மந்தனா, 2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனை ஆகிய விருதுகளைப் பெற்றார். இவரது சிறப்பான ஆட்டம் மற்றும் சிறந்த பேட்டிங் திறமைக்காக இந்த கவுரவம் அவருக்கு வழங்கப்பட்டது.
- 2018 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். அந்த போட்டியில் இந்தியாவுக்காக அதிக ரன்களை குவித்தார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த இந்தியப் பெண் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். அதாவது இந்த சாதனையை வெறும் 51 இன்னிங்ஸ்களில் அடைந்தார், இது பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான மைல்கல்.
- ஸ்மிருதி மந்தனாவுக்கு 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் உயரிய விருதான பெலிண்டா கிளார்க் விருது வழங்கப்பட்டது. மகளிர் பிக் பாஷ் லீக் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.