Racially Abused : எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இனவெறி சர்ச்சை..! இந்திய ரசிகர்கள் வேதனை..!
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய ரசிகர்கள் இனவெறி சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாளான நேற்று முடிவில் மைதானத்தில் குழுமியிருந்த இந்தியர்கள் இனவெறி வார்த்தைகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த போட்டியின் நான்காம் நாளான நேற்று இந்திய வீரர்களை ஊக்குவிப்பதற்காக ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கூடியுள்ளனர். இந்த நிலையில், இந்திய ரசிகர்களை நோக்கி சில இங்கிலாந்து ரசிகர்கள் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். மேலும், இந்தியர்களை இழிவுப்படுத்தும் விதமாக இனவெறியுடனும் திட்டியுள்ளனர்.
Racist behaviour at @Edgbaston towards Indian fans in block 22 Eric Hollies. People calling us Curry C**ts and paki bas****s. We reported it to the stewards and showed them the culprits at least 10 times but no response and all we were told is to sit in our seats. @ECB_cricket pic.twitter.com/GJPFqbjIbz
— Lacabamayang!!!!!!! (@AnilSehmi) July 4, 2022
இதனால், அதிர்ச்சியடைந்த இந்திய ரசிகர்கள் அங்கிருந்த பாதுகாவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் இந்தியர்களின் புகார்களை அலட்சியப்படுத்தியதுடன் தரக்குறைவாக பேசியவர்களை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
We are very concerned to hear reports of racist abuse at today's Test match. We are in contact with colleagues at Edgbaston who will investigate. There is no place for racism in cricket
— England and Wales Cricket Board (@ECB_cricket) July 4, 2022
இதையடுத்து, இந்திய ரசிகர்கள் பலரும் இந்த சம்பவத்தை தங்களது சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்டில் இனவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இனவெறி புகார் பற்றி கேட்டு நாங்கள் மிகவும் கவலையடைந்தோம். இதுதொடர்பாக, விசாரணை செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
So much for battling racism in cricket!! @Edgbaston was horrific today. So many complaints made to stewards however said person was not removed. So disappointed in what we had to face most of the day. @ICC @ECB_cricket @BCCI
— Reena 🇮🇳 ❤️ 🇮🇳 (@RinksB) July 4, 2022
ரீனா என்ற ரசிகளை கிரிக்கெட்டில் ஏராளமான இனவெறிவாதம். எட்ஜ்பாஸ்டன் இன்று மிகவும் பயங்கரமாக இருந்தது. எவ்வளவோ புகார் தெரிவித்தும் அவர்களை அப்புறப்படுத்தவில்லை. மிகவும் அதிருப்தியாக இருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்