Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி... அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!
Suresh Raina : நாளைய போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20:
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது.
முன்னதாக, முதல் டி 20 போட்டி கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார். இதன் மூலம் இந்திய அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ரெய்னா பரிந்துரை செய்த வீரர்கள்:
இந்நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 14) ஆம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது. இச்சூழலில், இந்த போட்டியில் இரண்டு வீரர்களை இடம் பெற செய்ய வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “ விரட் கோலி இரண்டாவது டி 20 போட்டியில் விளையாடுவார். சிறிய மைதானம் என்பதால், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆவேஷ் கான் அணியில் இடம் பெற வேண்டும்.
அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் இருப்பது முக்கியம். ஏனென்றால், ஷிவம் துபே 4 ஓவர்கள் வீசுவது என்பது சவாலான ஒன்று அதேநேரம் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
இந்திய அணி வீரர்கள்:
முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) விராட் கோலி, 5) திலக் வர்மா, 6) ரிங்கு சிங், 7) ஜிதேஷ் சர்மா, 8) சஞ்சு சாம்சன், 9) சிவம் துபே, 10) வாஷிங்க்டன் சுந்தர், 11) அக்சர் படேல், 12) ரவி பிஷ்னாய், 13) குல்தீப் யாதவ், 14) அர்ஷ்தீப் சிங், 15) ஆவேஷ் கான், 16) முகேஷ் குமார்.
மேலும் படிக்க: Virat Kohli: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கணிப்பு!
மேலும் படிக்க: Tamil Thalaivas: வெற்றி முனைப்பு.. ஹரியானா ஸ்டீலர்ஸை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்! நம்பிக்கையுடன் ரசிகர்கள்!