(Source: Poll of Polls)
Abhishek Sharma: "பாட் கம்மின்ஸ் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுப்பார்" - மனம் திறந்த அபிஷேக் சர்மா
பாட் கம்மின்ஸ் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுப்பார் என்று இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் அபிஷேக் சர்மா. இந்தாண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக அபாரமாக ஆடி, இந்திய அணியில் இடம்பிடித்தவர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் மூலமாக இந்திய அணியில் அறிமுகமாகி இரண்டாவது போட்டியிலே சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில், அபிஷேக் சர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
பாட் கம்மின்ஸ் தரும் சுதந்திரம்:
“ஆஸ்திரேலியாவுக்காக உலகக் கோப்பையை வென்ற பிறகு பாட் கம்மின்ஸ் வந்திருந்தார். பாட் கம்மின்சின் ஆரா அணிக்குள் மிகத் தெளிவாகத் தெரிந்தது. அவர் எல்லோரிடமும் பேசுவார், புதிய வீரர்களிடம் அவர்களின் குடும்பம் மற்றும் இதுபோன்ற விஷயங்களைக் கேட்பார். அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்தார்.
பெண்களின் கவனம்:
நான் பெண்களின் கவனத்தை மட்டுமல்ல, ஆண்களின் கவனத்தையும் பெற்றிருக்கிறேன். இது மிகவும் நன்றாக இருந்தது. இந்த தருணங்கள் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் அல்லது பிரபலத்திற்கும் ஊக்கத்தை அளிக்கும். நானும் அவர்களிடமிருந்து அத்தகைய கவனத்தைப் பெற்றேன், நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வாழ்த்துச் செய்திகளைப் பெற்றேன்.
எனது திட்டம் தெளிவாக இருந்தது, நான் எனது பந்துவீச்சாளர்களை சுதந்திரமாக அணுகுவேன். நான் நீண்ட காலமாக டிராவிஸ் ஹெட்டைப் பின்தொடர்ந்ததால், டிராவிஸ் ஹெட்டும் இதேபோன்ற அணுகுமுறையுடன் விளையாடுகிறார் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் மிக விரைவாக மாற்றியமைத்தோம், ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சு எங்களை தொந்தரவு செய்கிறது என்று நாங்கள் நினைத்ததில்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தாண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ஹைதரபாத் அணி மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. அதற்கு அபிஷேக் சர்மாவும் முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவரது அதிரடியான பேட்டிங் சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கு முக்கிய காரணம் ஆகும்.
அபிஷேக் சர்மாவிற்கு இலங்கைத் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் இனி வரும் காலங்களில் அவர் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உலா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 23 வயதான அபிஷேக் சர்மா 5 டி20 போட்டிகளில் ஆடி 1 சதத்துடன் 124 ரன்கள் எடுத்துள்ளார். 63 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 7 அரைசதங்களுடன் 1376 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க:
மேலும் படிக்க: