மேலும் அறிய

Rohit sharma: ”என்னால முடியல” அஸ்வின், ஜடேஜாவிடம் மாட்டி புலம்பித் தவித்த ரோகித்சர்மா..!

ஜடேஜா மற்றும் அஸ்வின் இடையே மாட்டிக்கொண்டு தவித்ததாக, கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து, அஸ்வின் 8 விக்கெட்டுகளையும், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

ரோகித் எதிர்கொண்ட சவால்

அவர்களின் செயல்பாடு தொடர்பாக போட்டி முடிந்த பிறகு வர்ணனையாளர்களுடன் கலந்துரையாடிய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  “அணியில் திறமையான 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதும், அவர்கள் சிறப்பாக செயல்படுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அணியில் மற்ற வீரார்களை கையாள்வதை காட்டிலும், ஜடேஜா மற்றும் அஸ்வினை கையாள்வது கடினமானதாக உள்ளது.

ஒரு புறம் நான் 250வது விக்கெட்டை எடுக்க வேண்டும் என்னிடம் பந்தை கொடுங்கள் என ஜடேஜா கேட்கிறார். மற்றொரு புறம் 4 விக்கெட்களை எடுத்துவிட்டேன். 5 விக்கெட்ஸை பூர்த்தி செய்ய வேண்டும் என அஸ்வின் கேட்கிறார். அவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு அதுதான் நான் எதிர்கொண்ட சவாலாக இருந்தது. சாதனைகளை பற்றி நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை.

ஆனால், அவர்கள் இருவருக்கும் அதுகுறித்து நன்றாக தெரிந்து இருந்தது. அவர்கள் இருவரும் தரமான பந்துவீச்சாளர்கள். அவர்களை சரியான எண்டிலிருந்து பந்துவீச வைக்க வேண்டும் என்ற அழுத்தம் எப்போதும் என்மீது உள்ளது” என ரோகித் சர்மா கூறினார். இந்த போட்டியில் ஜடேஜா தனது 250 விக்கெட்டையும் பூர்த்தி செய்தார். அஸ்வினும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அந்த 3 பேருக்கு சமம்...

 முன்னதாக பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது பேசிய ரோகித் சர்மா, ”திறமையான சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோரை வழிநடத்துவது என்பது, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை வழிநடத்துவது போன்றது என பாராட்டினார். நாக்பூர் போன்ற மைதானங்களில் பல ஆண்டுகள் விளையாடி, பெரும் அனுபவத்தை கொண்ட அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்‌ஷர் போன்ற வீரர்கள் அணியில் இருப்பது பெரும் அதிர்ஷ்டம்.

அவர்கள் ஒருபோதும் உங்களை ஏமாற்றமட்டார்கள். மைதானத்தில் உள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே நல்ல முடிவு கிடைக்கும். மைதானம் இந்திய தரப்புக்கு மட்டுமின்றி, இரண்டு தரப்பினருக்குமே சாதகமாக தான் இருந்தது” எனவும் ரோகித் சர்மா பேசினர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget