INDvsSA 1st Test Day 5 Live: 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா
கடைசி நாள் ஆட்டமான இன்று, தென்னாப்ரிக்கா வெற்றிப்பெற 211 ரன்கள் தேவை, இந்தியா வெற்றிப்பெற 6 விக்கெட்டுகள் தேவை!
LIVE
Background
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான நேற்று இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்பு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு சுருண்டது.மூன்றாவது நாள் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது.
அதனை அடுத்து நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் ஷர்துல் தாகூர்(10) ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் ராகுலும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு பிறகு முதல் பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் ஜென்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
விராட் கோலியைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இதன்காரணமாக இந்திய அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 305 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. நேற்றைய நாளின் ஆட்டம் மீதம் இருந்த நிலையில் தென்னாப்ரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து. இறுதியாக, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருக்கிறது தென்னாப்ரிக்கா அணி. இன்று கடைசி நாள் ஆட்டம் மதியம் தொடங்க உள்ளது. தென்னாப்ரிக்கா வெற்றிப்பெற 211 ரன்கள் தேவை, இந்தியா வெற்றிப்பெற 6 விக்கெட்டுகள் தேவை!
ஷமி வேகத்தில் வீழ்ந்த ஜென்சன்-8ஆவது விக்கெட் இழந்த தென்.ஆப்பிரிக்கா
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
வெற்றியின் விளிம்பில் இந்தியா..! தோல்வியை தவிர்க்குமா தெ. ஆப்பிரிக்கா..!
இந்திய அணி நிர்ணயித்துள்ள 305 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளை வரை 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களுடன் ஆடி வருகிறது. தெம்பா பவுமா 34 ரன்களுடனும், மார்கோ ஜேன்சன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.