IND vs SA 4th T20 : வெற்றியை தொடருமா இந்தியா...? தொடரை கைப்பற்றுமா தென்னாப்பிரிக்கா..?
இந்தியா தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 4வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 4வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 4வது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி முதல் இரு போட்டிகளில் தோற்றாலும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி புத்துணர்ச்சியை பெற்றுள்ளது. அதே புத்துணர்ச்சியுடன் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கி வெற்றியை பெற போராடும். அதேசமயத்தில் கடந்த போட்டியில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
கடந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான்கிஷான் இருவரும் சிறப்பாக ஆடினர். மேலும், அயர்லாந்து அணிக்கு எதிரான தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்ட்யாவும் இன்று சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஜொலிக்காத ஸ்ரேயாஸ், ரிஷப்பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பாரக்கப்படுகிறது.
கடந்த போட்டியில் அசத்தி தனது பார்முக்கு திரும்பிய ஹர்ஷல் படேல், சாஹல் இந்த போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஷ்குமார் மற்றும் ஆவேஷ்கானும் இந்த போட்டயில் சிறப்பாக வீசினால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும். ஹென்ட்ரிக்ஸ் மற்றும் ப்ரெடரியஸ், கிளாசென் ஆகியோர் அதிரடியாக ஆட வேண்டியது அவசியம். வான்டர் டுசென், டேவிட் மில்லர் இந்த போட்டியில் அதிரடி காட்டினால் தென்னாப்பிரிக்க அணிக்கு கூடுதல் பலமாகும். ரபாடா, பர்னெல், நோர்ட்ஜெ, கேஷவ் மகாராஜ் ஆகியோர் சிறப்பாக வீசினால் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கலாம். ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்ட்ரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்