மேலும் அறிய

IND vs NZ Score Live: விடாமல் பெய்யும் மழை..! போட்டியை கைவிட்ட அணிகள்..! ரசிகர்கள் ஏமாற்றம்..!

IND vs NZ Score Live: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடக்கும் வில்லிங்டனில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LIVE

Key Events
IND vs NZ Score Live: விடாமல் பெய்யும் மழை..! போட்டியை கைவிட்ட அணிகள்..! ரசிகர்கள் ஏமாற்றம்..!

Background

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்திய அணிக்கு நியூசிலாந்து நாட்டிற்கு பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியானது இன்று மதியம் 12 மணிக்கு நியூசிலாந்து நாட்டில் உள்ள வெலிங்டனில் தொடங்க இருக்கிறது. 

டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணைக் கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோருக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த தொடரின்மூலம் ஒட்டுமொத்த பார்வையும் இளம் இந்திய வீரர்களின் மீது திரும்பியுள்ளது. இன்றைய போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய உம்ரான் மாலிக் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இணைந்து பந்துவீச இருக்கின்றனர். 

அதேபோல், நீண்டநாள் காத்திருப்புக்கு பிறகு இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் தங்கள் திறமைகளை இந்த தொடரின்மூலம் நிரூபிக்கலாம். மேலும், சுப்மன் கில் முதல் முறையாக டி20 தொடருக்கான அழைப்பை பெற்றுள்ளார். 

ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணிக்கு ரிஷப் பந்த் துணை கேப்டனாக உள்ளார். வருங்கால இந்திய அணியை கருத்தில்கொண்டு தற்போது மிகப்பெரிய மாற்றங்களை பிசிசிஐ செய்து வருகிறது. 

இதுவரை நேருக்குநேர்:

விளையாடிய போட்டிகள்: 21

இந்தியா வெற்றி: 11

நியூசிலாந்து வெற்றி: 9

முடிவு இல்லை: 1

ரெக்கார்ட்ஸ்:

  • நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் : ரோகித் சர்மா (511)
  • இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள் : கொலின் முன்ரோ (426)

அதிக விக்கெட்கள் : 

  • ஜஸ்பிரித் பும்ரா - 12
  • இஷ் சோதி -  20

இந்திய அணி: சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐய் , குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல்

நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி

13:37 PM (IST)  •  18 Nov 2022

மழையால் போட்டி ரத்து..!

வில்லிங்டனின் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ரத்து செய்யப்படுகிறது. 

11:59 AM (IST)  •  18 Nov 2022

இரு அணிகளிலும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..!

இஷ் சோதி -  20 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா - 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். 

 

11:57 AM (IST)  •  18 Nov 2022

இரு அணிகளிலும் ஒட்டுமொத்தமாக அதிக ரன் அடித்தவர்கள்..!

நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் : ரோகித் சர்மா (511)

இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள் : கொலின் முன்ரோ (426)

11:55 AM (IST)  •  18 Nov 2022

இதுவரை இந்தியா Vs நியூசிலாந்து

 

விளையாடிய போட்டிகள்: 21. அதில் இந்திய அணி 11 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. 

11:53 AM (IST)  •  18 Nov 2022

மழையிலும் மைதானத்தை நிரப்பிய ரசிகர்கள்..!

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் தாமதமாக தொடங்கினாலும், ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் மைதானம் முழுவதும் நிரம்பி வழிகின்றனர். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget