India vs England Test Series 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்... இடம் பிடிப்பாரா ரிங்கு சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிங்கு சிங் இடம் பிடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் தொடர் இது என்பதால் இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது இந்திய அணி. இச்சூழலில் தான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக தோல்வியை சந்திக்காமல் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிநடை போடும் இந்திய அணி இந்த முறையும் அதை தக்க வைக்கும் முனைப்பில் இருக்கிறது. அதேநேரம் இந்த மோசமான சாதனையில் இருந்து வெளியேறி இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்று இங்கிலாந்து அணி எதிர்பார்த்து காத்திருக்கிறது. மேலும் ரசிகர்களும் இந்த போட்டிகளை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. மேலும், மீதம் உள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் பட்டியில் இரண்டாவது போட்டியின் முடிவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
டெஸ்ட் தொடரில் வாய்ப்பு:
இந்நிலையில் தான் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரிங்கு சிங் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்தார். இச்சூழலில் தான் இந்திய ஏ அணியில் இடம் பிடித்த இவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் களம் இறக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. உத்தரபிரதேச அணிக்காக 43 முதல் தர போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் மற்றும் 20 அரைசதங்கள் என மொத்தம் 3099 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் முதல் தர கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 71 என்ற அடிப்படையில் இருக்கிறது. இதனால் இவருக்கு இந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் சூழல் நிலவுவதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க: India Vs England Test: இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்து அணிக்கு ஆலோசனை சொன்ன ஆலன் டொனால்ட்..
மேலும் படிக்க: IPL 2024: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய டாடா நிறுவனம்...எத்தனை கோடிக்கு தெரியுமா?