IND vs ENG Test: ”அடிக்குற அடியில இந்திய அணி கதறும்”... எச்சரிக்கும் பென் ஸ்டோக்ஸ்..!
கடந்த சனிக்கிழமை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மற்றும் ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ரோகித்சர்மா தலைமையில் இங்கிலாந்து சென்றுள்ளது. ஜூலை 1-ந் தேதி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இதுவரை இங்கிலாந்து எதிரான 5 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவாரா..? மாட்டாரா..? என்று தெரியவில்லை. இருப்பினும் ரோகித் சர்மாவுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் இந்திய அணியின் சேர்க்கப்பட்டார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி ட்ரா ஆக, மற்றொரு போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அந்த போட்டியே தற்போது நடைப்பெறவுள்ளது.
இங்கிலாந்து அணியும் தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையில் களமிறங்க இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வொயிட் வாஷ் செய்த பலத்துடன் இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
இந்திய அணியை கடுமையாக அடிப்போம் :
இந்தநிலையில், இந்திய அணிக்கு எதிரான 5 வது டெஸ்ட் போட்டி குறித்து பேட்டியளித்தார். அப்போது அவர், ”நான் சொல்வதை குறித்து வைத்து கொள்ளுங்கள். நியூசிலாந்து அணியை அடித்ததுபோல இந்திய அணியை கடுமையாக அடிப்போம். ஒவ்வொரு அணிக்கு எதிராக தனித்தனி மனநிலையுடன் விளையாட மாட்டோம்.
தற்போது உள்ள இந்திய அணி எப்படிப்பட்ட அணியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அவர்கள் மாறுப்பட்ட இங்கிலாந்து அணியை பார்க்கப்போகின்றனர். இங்கிலாந்து அணிக்கு நான் புதிய கேப்டனாக பதவி ஏற்ற பிறகு, வெற்றியை தாண்டி வீரர்களின் மனநிலையை தான் மாற்ற விரும்பினேன். நாட்டிற்க்காக விளையாடுகிறோம் என்றும், ஒவ்வொரு போட்டியையும் அனுபவித்து ஆட வேண்டும் என்றும் தெரிவித்தேன். அதற்கான முடிவு நான் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாக கிடைத்தது” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்