(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs AUS: சச்சின், கோலி, தோனி செய்யாத பெரிய சாதனை.. புதிய மைல்கல்லை தனதாக்க காத்திருக்கும் ரோஹித்..! அப்படி என்ன?
இந்திய அணியில் இன்றுவரை சிறந்த பேட்ஸ்மேன்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்கள் படைக்க முடியாத சாதனையை ரோஹித் சர்மா படைக்க இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள ஜம்தாவில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் பிப்ரவரி 9 முதல் 13 வரை முதல் டெஸ்ட் போட்டியும், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிப்ரவரி 17 முதல் 21 வரை 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மார்ச் 1 முதல் 5 வரையிலும், நான்காவது டெஸ்ட் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 9 முதல் 13 வரையிலும் நடைபெறவுள்ளது.
10 times, Rohit Sharma Scored 75 or more runs in Test
— ʀᴀᴊɴᴀɴᴅᴀɴɪ ꜱɪɴɢʜ⁴⁵🇮🇳 (@Singh_Ro45) February 7, 2023
India's Result in those Knocks
177 (Won)
111* (Won)
79 (Won)
82 (Won)
102* (Won)
176 (Won)
127 (Won)
212 (Won)
161 (Won)
83 (Won)*
Reason For Hitma 🔥#RohitSharma || #BGT2023@ImRo45 pic.twitter.com/jdTfGT0C8s
இந்த போட்டிக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்களும் நாக்பூர் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், இந்திய அணியில் இன்றுவரை சிறந்த பேட்ஸ்மேன்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்கள் படைக்க முடியாத சாதனையை ரோகித் சர்மா படைக்க இருக்கிறார். இந்த சாதனையை மட்டும் ரோகித் படைத்தாலும் இந்தியாவின் முதல் வீரர் என்ற பெருமையையும், உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையை படைப்பார்.
ரோஹித் சர்மா:
பிப்ரவரி 9 ம் தேதி நாக்பூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசினால், கேப்டனாக கிரிக்கெட்டின் மூன்று பார்மேட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். அதேபோல், உலகின் நான்காவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை தனதாக்குவார். முன்னாள் இந்திய அணியின் கேப்டன்கள் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலி கேப்டனாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சதமடித்துள்ளனர். ஆனால், அவர்களது டி20 சதம் என்பது கனவாக இருந்தது. அதனால் ரோகித் சர்மாவுக்கு இந்த தொடர் ஒரு சிறந்த வாய்ப்பு.
Captain Rohit Sharma was practicing this same shot in nets to counter Nathan Lyon.pic.twitter.com/n3MntRgR2F
— Mufaddal Vodra (@mufaddal_vodra) February 6, 2023
கேப்டனமாக ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கான சதம் அடித்துள்ளார். கேப்டனாக டெஸ்டிலும் சதம் அடித்தால் அரிய சாதனையை படைப்பார். இதற்கு முன்னதாக, இலங்கையின் முன்னாள் கேப்டன் திலகரத்ன தில்ஷான், முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் தற்போது கேப்டனாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச) சதம் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் உள்ளனர். ரோகித் சர்மாவும் அடித்தால் இந்த அரிய சாதனை பட்டியலில் இணைந்து கலக்குவார்.
கேப்டனாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் சதம் அடித்த பேட்ஸ்மேன்கள்:
- திலகரத்ன தில்ஷன் (இலங்கை)
- ஃபாஃப் டு பிளெசிஸ் (தென் ஆப்பிரிக்கா)
- பாபர் அசாம் (பாகிஸ்தான்)