மேலும் அறிய

IND vs PAK T20 World cup: சூர்யகுமார் யாதவ் vs முகம்மது ரிஸ்வான்...யார் டாப் பிளேயர்...புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில்  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கேப்டன் பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தான்  அணியும் மோதுகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில் யாருக்கு வெற்றி காத்திருக்கிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில்  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கேப்டன் பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தான்  அணியும் மோதுகின்றன. நேற்றுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி 90% மழையால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில்  தற்போது மழை பெய்ய குறைவான வாய்ப்பே உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதுவரை உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியே சந்திக்காத இந்திய அணி கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இன்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இரு அணிகளுக்குள்ளும் ஒரு போட்டி நிலவுகிறதோ இல்லையே இரு அணி வீரர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொருவரும் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல டி20 கேரியரில் மிகப்பெரிய சாதனைப் பட்டியலோடு காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியைச் சேர்ந்த சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முகம்மது ரிஸ்வான் ஆகியோரில் யார் ஸ்டார் ஆஃப் தி மேட்ச் ஆக இருப்பார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவரின் பேட்டிங் புள்ளிவிவரங்களை நாம் காணலாம். 

சூர்யகுமார் யாதவ் 

2021 ஆம் ஆண்டு டி20 போட்டியில் ஆடத் தொடங்கிய சூர்யகுமார் யாதவ் இதுவரை 34 போட்டிகளில் ஆடி 1045 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 38.7 சதவீதமாக உள்ள நிலையில் ஸ்ட்ரைக் ரேட் 176.8 ஆகும். 9 அரைசதங்களையும், ஒரு சதமும் அடித்துள்ள சூர்யகுமார் யாதவ் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 23 போட்டிகளில் ஆடியுள்ளார்.  இதில் 801 ரன்களை குவித்துள்ள அவர் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் சதத்தையும் எட்டினார். மேலும் 6 அரைசதங்களையும் விளாசிய சூர்யகுமாரின் ஸ்ட்ரைக் ரேட் 184.5 ஆக உள்ளது. 

முகம்மது ரிஸ்வான்

சூர்யகுமாரை விட 7 ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு முகம்மது ரிஸ்வான் டி20 போட்டிகளில் அறிமுகமான நிலையில் இதுவரை 73 போட்டிகளில் விளையாடி 2,460 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 52.34 சதவீதமாக உள்ள நிலையில் ஸ்ட்ரைக் ரேட் 128.05ஆகும். 22 அரைசதங்களும், ஒரு சதமும் அடித்துள்ள ரிஸ்வான் 2022 ஆம் ஆண்டில் 18 போட்டிகளில் ஆடி 821 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 9 அரைசதங்கள் அடங்கும். இந்த ஆண்டில் ரிஸ்வான் 126.3 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். 

இருவரையும் ஒப்பிடும் போது ரன்கள் மற்றும் மேட்ச் எண்ணிக்கை அடிப்படையில் ரிஸ்வான் முன்னிலையில் இருந்தாலும், அதற்கு சற்றும் குறைந்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சூர்யகுமார் யாதவ் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் ரன்களை குவிக்கப்போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Mahindra THAR: என்ன இப்படி பண்ணிட்டீங்களே.?! பிரபல SUV THAR-ன் விலையை ஏற்றிய மஹிந்திரா; எவ்வளவு தெரியுமா.?
என்ன இப்படி பண்ணிட்டீங்களே.?! பிரபல SUV THAR-ன் விலையை ஏற்றிய மஹிந்திரா; எவ்வளவு தெரியுமா.?
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
Embed widget