Smriti Mandhana: பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கவில்லை: என்ன ஆச்சு இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு?
இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார்.
இந்திய மகளிர் அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று பேட்டிங் பயிற்சியாளர் ஹிருஷிகேஷ் கனிட்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹிருஷிகேஷ் கனிட்கர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மந்தனாவுக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றும், பிப்ரவரி 15-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது ஆட்டத்தில் அவர் பங்கேற்பார் என்றும் உறுதிப்படுத்தி உள்ளார் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹிருஷிகேஷ் கனிட்கர் . சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த முத்தரப்பு தொடரின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹர்மன்பிரீத் கவுர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட தகுதியானவர் என்று பயிற்சியாளர் கூறியுள்ளார்.
Star India batter is likely to miss Sunday's blockbuster #T20WorldCup clash against Pakistan.
— ICC (@ICC) February 11, 2023
Details 👇https://t.co/6FiPrdeV4t
“ஹர்மன் விளையாட தகுதியானவர். அவர் கடந்த இரண்டு நாட்களாக வலைகளில் பேட்டிங் பயிற்சி செய்தார், அவர் நன்றாக இருக்கிறார், ”என்று கனிட்கர் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். “ஸ்மிருதிக்கு விரலில் காயம் உள்ளது, அவர் இன்னும் அதிலிருந்து குணமடையவில்லை. ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவே அவர் விரைவில் குணமடைந்து அணிக்கு திறும்புவார், எனவே அவர் பெரும்பாலும் விளையாடமாட்டார். இது ஒரு எலும்பு முறிவு அல்ல, இரண்டாவது ஆட்டத்தில் இருந்து அவர் அணில் இடம் பெறுவார் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் கூறியிருந்தார்.
2012 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பைகளில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றது, ஆனால் நாளை (பிப்ரவரி,12)ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுடனான போட்டியை எதிர்நோக்குவதாகவும், இந்திய அணி அனைத்து சவால்களுக்கும் அணி தயாராக இருப்பதாகவும் கனிட்கர் கூறினார்.
"இந்திய அணியில் இருக்கும் வீராங்கனைகளில் பெரும்பாலோர் இதற்கு முன்னர் பாகிஸ்தானுடன் விளையாடியிருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடக்கும், என்ன சூழ்நிலை உள்ளது என்பது நன்றாகவே தெரியும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது, குறிப்பாக இதுபோன்ற போட்டிகளில் விளையாடுவது என்பது அனைத்து வீராங்கனைகளுக்கும் மிகவும் புத்துணர்வு தரக்கூடியது. மேலும் அனைவரும் ஆவலுடன் இந்த போட்டியை காண காத்திருக்கின்றனர்” எனவும் கனிட்கர் கூறினார்.