IND vs SA 1st T20: காயத்தால் விலகிய கே.எல்.ராகுல், குல்தீப்.! யாருக்கெல்லாம் வாய்ப்பு? இதுதான் டீம்!
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக கேப்டன் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் விலகியுள்ளனர். கேப்டனாக ரிஷப்பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுடன் டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் டி20 போட்டி இன்று டெல்லியில் அமைந்துள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நேருக்கு நேர் மோத உள்ளன.
இந்த போட்டி இன்று இரவு 7 மணியளவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் இந்திய கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
Team India Captain KL Rahul has been ruled out of the T20I series against South Africa owing to a right groin injury while Kuldeep Yadav will miss out in the T20I series after getting hit on his right hand while batting in the nets last evening.@Paytm #INDvSA
— BCCI (@BCCI) June 8, 2022
இந்த நிலையில், பயிற்சியின்போது இந்திய கேப்டன் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. போட்டிக்கு முன்பு காயத்தில் இருந்து மீள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுலுக்கு காயம் குணம் அடையாத காரணத்தால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுவார் என்று நேற்று நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.
கே.எல்.ராகுல் இந்த தொடரில் இருந்து விலகியதால் இந்த தொடருக்கு கேப்டனாக ரிஷப்பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் அசத்திய குல்தீப் யாதவும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால், இந்திய அணிக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.
NEWS 🚨- KL Rahul and Kuldeep Yadav ruled out of #INDvSA series owing to injury.
— BCCI (@BCCI) June 8, 2022
The All-India Senior Selection Committee has named wicket-keeper Rishabh Pant as Captain and Hardik Pandya as vice-captain for the home series against South Africa @Paytm #INDvSA
இன்று நடைபெறும் முதல் போட்டியில் ரிஷப்பண்ட் தலைமையில் களமிறங்கும் ரிஷப்பண்ட் தலைமையிலான அணிக்கு ஹர்திக்பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் இந்திய அணியில் இஷான்கிஷான், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ்கார்த்திக், அக்ஷர் படேல், ஹர்ஷல் படேல், சாஹல், தீபக் ஹூடா, உம்ரான் மாலிக், வெங்கடேஷ் அய்யர், அர்ஷ்தீப்சிங் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே அணி மற்றும் முதல் அணி என்ற உலக சாதனையை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Nayanthara Vignesh Shivan Marriage LIVE: நயனுக்கும் - சிவனுக்கும் இன்று டும் டும்...! வாழ்த்து மழையை கொட்டும் ரசிகர்கள்...!
மேலும் படிக்க : நோ ஹனிமூன்..உடனே ஷூட்டிங்தான்! - நயன் - சிவன் திருமண அப்டேட்ஸ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்