INDW vs SLW AsiaT20 2022 Final: 7வது முறையாக கோப்பை கனவு...! 8வது முறை இறுதிப்போட்டியில் இந்தியா..! வசப்படுமா ஆசியகோப்பை..?
2022 மகளிர் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.
மகளிர் ஆசியக் கோப்பை 2022 இறுதிப் போட்டி: மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பை தொடரில் இந்த முறை பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்றன. அக்டோபர் 1-ஆம் தேதி மகளிருக்கான ஆசிய கோப்பைத் தொடர் தொடங்கியது.
கடந்த வியாழன் அன்று இந்தியா தனது முதல் அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை தோற்கடித்தது. அதேபோல், இலங்கை அணி இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று மதியம் 1 மணிக்கு சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
ஏற்கனவே இரு அணிகளும் நான்கு முறை இறுதிப் போட்டியில் மோதியுள்ளன. இதில் அனைத்து முறையும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நேரடியாக மட்டும் இரு அணிகள் 21 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்திய அணி 16 முறையும், இலங்கை 4 போட்டிகளில் இரு அணிகளும் 2008-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன. அதில் இந்திய அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், இந்த சீசனில் நடைபெற்ற லீக் போட்டியிலும் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு மகளிர் ஆசிய கோப்பையில் இந்திய அணி 6 முறை வெற்றி பெற்றுள்ளது.
League Stage topped ✅
— BCCI Women (@BCCIWomen) October 13, 2022
Semi-Final won ✅#AsiaCup2022 Final, here we come 👏 👏#TeamIndia pic.twitter.com/o9dSUjCsdQ
இந்தநிலையில், இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் இடையேயான மகளிர் ஆசியக் கோப்பை T20 இறுதிப் போட்டியை நீங்கள் எங்கே, எப்படிப் பார்க்கலாம் என்பதை தெரிந்துகொள்ள..
இந்தியா மற்றும் இலங்கை பெண்கள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?
இந்தியா vs இலங்கை மகளிர் ஆசியக் கோப்பை டி20 இறுதிப் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா vs இலங்கை மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கான டாஸ் நேரம்?
இந்தியா மற்றும் இலங்கை மகளிர் ஆசியக் கோப்பை டி20 2022 இறுதிப் போட்டிக்கான டாஸ் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு நடக்கும்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை எதில் பார்க்கலாம்?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக காணலாம்
ஆன்லைனில் எப்படி பார்ப்பது..?
இந்தியா மற்றும் இலங்கை மகளிர் ஆசியக் கோப்பை டி20 இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக பார்க்கலாம்.
இந்தியா:
ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா, சினே ராணா, ராதா யாதவ், ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்
இலங்கை:
சாமரி அத்தபத்து (கேப்டன்), ஹர்ஷிதா மாதவி, ஹாசினி பெரேரா, நிலக்ஷி டி சில்வா, கவிஷா தில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி (விக்கெட் கீப்பர்), மல்ஷா ஷெஹானி, ஓஷாதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய