Ind W vs Aus W: சதமடித்த லிட்ச்ஃபில்ட்.. கம்பேக் கொடுத்த ஹர்மன் படை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆஸ்திரேலியா..
Ind W vs Aus W : 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் நாக் அவுட் சுற்றில் சதமடித்த நான்காவது ஆஸ்திரேலிய வீராங்கணையானார் லிட்ச்ஃபீல்ட்

இந்திய அணிக்கு எதிரான 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கணை போப் லிட்ச்பீல்ட் சதமடித்து அசத்தியுள்ளார்.
உலகக் கோப்பை - 2வது அரையிறுதி
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதி வருகின்றன,
இந்தப்போட்டியில் டாசில் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்களும், ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்களும் செய்யப்பட்டு இருந்தது.
ஏமாற்றம் தந்த அலீசா ஹீலி:
மழை அச்சத்தோடு தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் லிட்ச்பீல்ட் அதிரடியாக விளையாடினார். இந்திய என்றாலே காட்டடி அடிக்கும் கேப்டன் அலீசா ஹீலி ஆரம்பத்திலிருந்தே தடுமாறிக் கொண்டிருந்தார். 2 ரன்னில் இருக்கும் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் வீணாடித்தார். ஆனால் ஹீலியின் அதிர்ஷ்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
கிராந்தி கவுட் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி 5 ரன்னுக்கு நடையைக்கட்டிய நிலையில் மழையானது குறுக்கிட்டது.
திணறிய ஹர்மன்பிரீத்
ஹீலி ஆட்டமிழந்தால் என்ன நான் ஒரு கை பார்க்கிறேன், இந்திய அணியின் பந்துவீச்சை நொறுக்கி தள்ளினார் 22 வயதான இளம் வீராங்கணையான லிட்ச்பீல்ட். இவரது விக்கெட்டை எடுக்க பல பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் விக்கெட் எடுக்க முடியாமல் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் திணறிக்கொண்டிருந்தார். லிட்ச்பீல்ட் பக்கபலமாக அனுபவ வீராங்கணையான எலீஸ் பெர்ரி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
சதம் அடித்த லிட்ச்பீல்ட்:
அணியின் ஸ்கோர் வேகமாக உயர தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார், இதன் மூலம் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் நாக் அவுட் சுற்றில் சதமடித்த நான்காவது ஆஸ்திரேலிய வீராங்கணையாகவும், இளம் வயதில் நாக் அவுட் போட்டிகளில் சதம் என்கிற சாதனையையும் படைத்தார்.
Phoebe Litchfield brings up her third ODI ton in the #CWC25 semi-final against India 👏
— ICC (@ICC) October 30, 2025
Watch #INDvAUS LIVE in your region, broadcast details here ➡️ https://t.co/ULC9AuHQ4P pic.twitter.com/Yy4Ju8WDkO
ஆஸ்திரேலிய அணி 38 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது, பெர்ரி 74 ரன்களுடன் களத்தில் உள்ளார்.





















