IND vs ZIM: ஜிம்பாவே தொடரை வெல்லுமா இந்தியா?- போட்டியிலிருந்து விலகிய தீபக் சாஹர்.. இந்தியா பந்துவீச்சு
ஜிம்பாவே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் முதல் போட்டியில் விளையாடிய பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
A look at our Playing XI 👇
— BCCI (@BCCI) August 20, 2022
One change for #TeamIndia. Shardul Thakur comes in place of Deepak Chahar.
Live - https://t.co/6G5iy3rRFu #ZIMvIND pic.twitter.com/JAmJ6HxmGu
இந்திய அணியின் விவரம்:
கே.எல்.ராகுல், ஷிகர் தவான்,சுப்மன் கில்,இஷான் கிஷன்,தீபக் ஹூடா,சஞ்சு சாம்சன்,அக்சர் பட்டேல்,ஷர்துல் தாகூர்,அக்சர் பட்டேல்,குல்தீப் யாதவ்,சஞ்சு சாம்சன்,பிரசித் கிருஷ்ணா,முகமது சிராஜ்
ஜிம்பாவே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்திருந்தது. அதாவது தொடர்ச்சியாக ஒரு அணிக்கு எதிராக அதிக ஒருநாள் போட்டிகளை வென்று அசத்தியுள்ளது. இந்திய அணி 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஜிம்பாவே அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பாக அதிக பட்சமாக இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 12 ஒருநாள் போட்டிகளில் வெற்று பெற்று இருந்தது. தற்போது அந்தச் சாதனையை இந்திய அணி முறியடித்தது.
ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியான இந்திய வெற்றிகள்:
13* vs ஜிம்பாவே (2013-22)
12 vs பங்களாதேஷ் (1988-04)
11 vs நியூசிலாந்து (1986-88)
10 vs ஜிம்பாவே (2002-05)
இந்திய அணி ஏற்கெனவே ஜிம்பாவே அணிக்கு எதிராக 2002-05 ஆண்டில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று இருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது 13 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளத.
ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற போது தொடக்க ஜோடியின் பார்டனர்ஷிப் :
197/0 vs ஜிம்பாவே (ஷார்ஜா) (1998)
192/0 vs ஜிம்பாவே (ஹராரே) (2022)
126/0 vs ஜிம்பாவே (ஹராரே) (2016)
123/0 vs கிழக்கு ஆஃப்ரிக்கா (லீட்ஸ்) (1975)
116/0 vs வெஸ்ட் இண்டீஸ் (போர்ட் ஆஃப் ஸ்பெயின்) (1997)
114/0 vs இங்கிலாந்து (ஓவல்) (2022)
97/0 vs இலங்கை (ஷார்ஜா) (1984)
91/0 vs கென்யா (ப்ளாம்ஃபோவுன்டேன்) (2001)
இவை தவிர 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய வென்ற போட்டியில் அதிகமாக தொடக்க ஜோடி அடித்த ரன்களில் தவான் - கில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது.