![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND vs WI, 1 Innings Highlight: இந்திய அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்கு...அறிமுக போட்டியில் அசத்திய ரவி பிஷ்னோய்...!
IND vs WI, 1st T20: பூரான், மேயர்ஸ் அதிரடியால் தொடக்கத்தில் வேகமாக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ், அதன்பின்னர், 16 ஓவரில் தான் 100 ரன்கள் எடுத்தது.
![IND vs WI, 1 Innings Highlight: இந்திய அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்கு...அறிமுக போட்டியில் அசத்திய ரவி பிஷ்னோய்...! IND vs WI, 1st T20: West Indies given target of 158 runs against India at Eden Garden Stadium IND vs WI, 1 Innings Highlight: இந்திய அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்கு...அறிமுக போட்டியில் அசத்திய ரவி பிஷ்னோய்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/16/2018589c2eb96a90fde7b9ecaf15db9f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் முதல் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணிக்கு ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஈடன்கார்டன் மைதனாத்தில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே இந்திய அணி விக்கெட் எடுத்தது. ப்ரெண்டன் கிங் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். அதன்பின்னர், வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அதிரடியாக ஆடி வந்த கைல் மேயர்ஸ் (31 ரன்கள்) விக்கெட்டை சாஹல் எடுத்தார். அறிமுக டி20 போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் ரவி பிஷ்னோய். சேஸ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் தனது இரண்டாவது விக்கெட்டையும் அவர் எடுத்தார். அப்போது, 11 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது அந்த அணி. ரன்களை வாரிக்கொடுத்த வந்த தீபக் சாஹர் இந்தப் போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்தார். ஷூசைனை காட்டன் போல்ட் முறையில் சாய்த்தார்.
பூரான், மேயர்ஸ் அதிரடியால் தொடக்கத்தில் வேகமாக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ், அதன்பின்னர், 16 ஓவரில் தான் 100 ரன்கள் எடுத்தது. அப்போது, 108/5 ரன்கள் எடுத்து தடுமாறி வந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து, ரன்கள் குறைந்த நிலையில், மறுபக்கம் பூரான் மட்டும் நிலையாக நின்று ஆடி அரைசதம் அடித்தார். அவரும், கேப்டன் பொல்லார்டும் பின்னர் அணியின் ஸ்கோரை கொஞ்ச கொஞ்சமாக ஏற்றி வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் 6ஆவது விக்கெட்டை ஹர்ஷல் பட்டேல் வீழ்த்தினார். அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பூரானின் விக்கெட்டை சாய்த்தார். அப்போதும் வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்கள் முடிவில் 135/6 எடுத்தது.
இறுதியாக 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக பூரான் 61, கைல் மேயர்ஸ் 31, பொல்லார்ட் 24 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல், ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளாஇ சாய்த்தனர்.
தற்போது வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் இறங்கியுள்ளனர்.
Innings Break!
— BCCI (@BCCI) February 16, 2022
Two wickets apiece for @bishnoi0056 & @HarshalPatel23 as West Indies post a total of 157/7 on the board.#TeamIndia chase coming up shortly. Stay tuned.
Scorecard - https://t.co/jezs509AGi #INDvWI @Paytm pic.twitter.com/w71nNc7hPs
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)