IND vs WI, Full Match Highlight: 1000வது ஒரு நாள் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது இந்திய அணி
IND vs WI, 1st ODI: ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்களை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார் கோலி
![IND vs WI, Full Match Highlight: 1000வது ஒரு நாள் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது இந்திய அணி IND vs WI, 1st ODI: India won the match by 6 wickets against West Indies at Narendra Modi Stadium IND vs WI, Full Match Highlight: 1000வது ஒரு நாள் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது இந்திய அணி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/9dd77768657c219c4920b19c6325cf67_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆடும் 1000வது ஒருநாள் போட்டி இது என்பதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், 28 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று அசத்தி இருக்கிறது இந்திய அணி. இலக்கை சேஸ் செய்த இந்திய அணிக்கு, ஓப்பனிங் பேட்டர், கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை தந்தார். 60 ரன்கள் எடுத்து ரோஹித் அவுட்டாக, இஷன் கிஷன் (28), சூர்யகுமார் யாதவ் (34*), தீபக் ஹூடா (26*) ஆகியோர் ரன் சேர்த்தனர். இதனால், எளிதாக இலக்கை எட்டி வெற்றியை உறுதி செய்தது இந்திய அணி.
That's that from the 1st ODI. #TeamIndia win their 1000th ODI by 6 wickets 👏👏
— BCCI (@BCCI) February 6, 2022
Scorecard - https://t.co/6iW0JTcEMv #INDvWI pic.twitter.com/vvFz0ftGB9
முன்னதாக, இந்த போட்டியில் விராட்கோலி 6 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்களை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து இன்றைய போட்டியில் 8 ரன்கள் எடுத்து அவுட்டானார் கோலி. சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தாலும், சச்சினின் சாதனையை முறியடைத்துள்ளார். இதனால், ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்களை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார் கோலி.
முதல் இன்னிங்ஸில் நடந்தது என்ன?
முதலில் பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, 3வது ஓவரிலேயே விக்கெட் சரிந்தது. சிராஜ் ஓவரில் ஷாய் ஹோப் விக்கெட் சரிந்தது. அடுத்து களமிறங்கிய பேட்டர்களும் சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழ்ந்ததால், 100 ரன்களை கடக்கவே வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. ஜேசன் ராய் மட்டும் தனி ஆளாய் போராடி அரை சதம் கடந்தார். இந்திய அணி பந்துவீச்சாளர்களை பொருத்தவரை, சாஹல் 4 விக்கெட்டுகள், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள், சிராஜ் 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால், 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)