IND vs WI 1st ODI : பந்தே எங்கிருக்கிறாய்.. பறவையாய் பறந்து தடுத்த சாம்சன்... ட்விட்டரில் குவியும் பாராட்டு!
கடைசி நேரத்தில் இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் டைவ் அடித்து நான்கு ரன்களை தடுத்ததுதான் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணம் என்று பாராட்டி வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.
309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்களே எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவையாக இருந்தது. அப்பொழுது இறுதி ஓவரை வீச இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வந்தார். முதல் டாட் பந்தாக விழ, இரண்டாவது பந்து 1 ரன் கிடைத்தது. 3 வது பந்தை ஷெப்பர்டு பெளண்டரிக்கு விரட்ட ஆட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை தொற்றி கொண்டது.
அந்த ஓவரின் இரண்டாவது கடைசி பந்து லெக்-சைடில் சிராஜ் அதை வைட்டாக வீச, சாம்சன் தனது இடது பக்கம் டைவிங் செய்து பந்தை பெளண்டரிக்கு செல்லாமல் தடுத்தார். அப்பொழுது கிரீஸில் இருந்த இருவரும் ஒரு ரன் மட்டுமே எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால் கடைசி இரண்டு பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கடைசி நேரத்தில் இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் டைவ் அடித்து நான்கு ரன்களை தடுத்ததுதான் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணம் என்று முன்னாள் இந்திய வீரர்கள் முதல் இந்திய ரசிகர்கள் வரை சஞ்சு சாம்சனை ட்விட்டர் பக்கத்தில் பாரட்டி வருகின்றனர். அதில் ஒரு சில ட்வீட்கள் பின்வருமாறு :
Sanju Samson’s stop was the difference in the end. 100% boundary. And that would’ve been Game Windies.
— Aakash Chopra (@cricketaakash) July 22, 2022
The save from Sanju Samson made a huge impact on the victory of the Indian team, it was a certain 4 extra runs for West Indies & they could have won the game. pic.twitter.com/wxcDLVqY29
— Johns. (@CricCrazyJohns) July 22, 2022
Sanju Samson's save of the day with 8 needed off 2 probably won't be remembered tomorrow. #WIvIND pic.twitter.com/WOb6GO233g
— Rohit Sankar (@imRohit_SN) July 22, 2022
This man behind the stumps with Gloves on 🧤 is the Reason That the Majority of the Indians would be Sleeping peacefully tonight 🔥😍 And The other ( west )-Indians Must be feeling Lil sad
— SUMEET KUMAR (@sumeetkumar2524) July 22, 2022
Nevertheless well Played both the Team ❤️❤️ #IndvsWI #SanjuSamson #Sanju #DDSports pic.twitter.com/n1hv4WK2Rm
Flying Sanju samson saved India from marginal defeat.#WIvIND#SanjuSamson pic.twitter.com/5cXJlBplwm
— Sanuj Lodhi (@sanuj_lodhi) July 22, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்