IND vs WI 1st ODI: 3 ரன்களில் சதத்தை தவறவிட்ட ஷிகர் தவான்..! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..
இந்திய கேப்டன் ஷிகர்தவான் 97 ரன்களில் அவுட்டாகி 3 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டிரினிடாட்டில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது, இதன்படி, இந்திய கேப்டன் ஷிகர்தவானும், சுப்மன்கில்லும் பேட்டிங்கைத் தொடங்கினார்.
Fifties for #TeamIndia openers - @SDhawan25 & @ShubmanGill and a strong partnership of 117/0 👏👏
— BCCI (@BCCI) July 22, 2022
Live - https://t.co/g4AwFAO5ts #WIvIND pic.twitter.com/B5OHtpuMcz
ஆட்டம் தொடங்கியது முதல் சுப்மன்கில் அதிரடியாக ஆட, கேப்டன் ஷிகர்தவான் பொறுமையுடன் ஆடினார். இளம் வீரரான சுப்மன்கில் ஆட்டம் தொடங்கியது முதல் பந்துகளை விளாசுவதிலே குறியாக இருந்தார், வெஸ்ட் இண்டீசில் பந்துவீச்சும் சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால் சுப்மன்கில் சிறப்பாக ஆடினார். அவருக்கு கேப்டன் ஷிகர் தவான் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 100 ரன்களை கடந்தது. சுப்மன் கில் அபாரமாக ஆடி அரைசதத்தை கடந்தார்.
அணியின் ஸ்கோர் 119 ரன்களை எட்டியபோது சுப்மன்கில் 53 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய துணை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்து தொடரைப் போல இல்லாமல் மிகவும் நிதானமாகவும், சிறப்பாகவும் ஆடினார். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ஷிகர்தவான் பின்னர் அதிரடியாக ஆடத் தொடங்கினார்.
💔
— BCCI (@BCCI) July 22, 2022
Captain @SDhawan25 falls three short of his century as he departs after scoring a fine 97.
Live - https://t.co/tE4PtTfY9d #WIvIND pic.twitter.com/Z47MkSZIPb
இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினார். சிறப்பாக ஆடி வந்த ஷிகர்தவான் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் அவர் ஆட்டமிழந்தார். அவர் 99 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் மோட்டி பந்தில் அவுட்டானார். அவர் பவுண்டரிக்கு விளாசிய பந்தை ப்ரூக்ஸ் அபாரமாக பாய்ந்து கேட்ச் பிடித்தார். ஷிகர் தவான் 3 ரன்களில் சதத்தை தவறவிட்டதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்