IND vs SL, 3rd T20 LIVE :அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர்...
IND vs SL, 3rd T20, HPCA Stadium:
LIVE
Background
இந்தியா-இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தநிலையில், இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றதன் அதிகமாக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 போட்டிகளில் வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதுவரை சொந்த மண்ணில் அவர் 17 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 16 போட்டிகளில் இவர் வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தப் பிறகு தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக அதிகமான டி20 போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற ஆஃப்கானிஸ்தானின் சாதனையை இந்திய அணி சமன் செய்யும். 2019ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக 12 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது.
அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர்...
ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் தொடர்ந்து 3வது அரைசதத்தை பதிவு செய்தார்.
தீபக் ஹூடா 21 ரன்களில் கெட் அவுட்...
ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து சிறப்பாக விளையாடிவந்த தீபக் ஹூடா 16 பந்துகளில் 21 ரன்கள் அடித்து லகிரு குமாரா வீசிய 11 ஓவரில் க்ளீன் போல்டானார்.
10 ஓவர் முடிவில் இந்திய அணி 82/2...
இந்திய அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
சீறிய சாம்சன் 18 ரன்களில் அவுட்...
இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 12 பந்துகளில் 18 ரன்கள் அடித்து கருணாரத்னே வீசிய 7 வது ஓவரில் தினேஷ் சண்டிமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
6 ஓவர் முடிவில் இந்திய அணி 47/1...
இந்திய அணி 6 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.