Bumrah's Test Record: கபில்தேவ் சாதனை சமன்...! இந்திய மண்ணில் இது முதன்முறை..! பும்ரா படைத்த சாதனைகள் என்னென்ன..?
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய பும்ரா பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்க, இலங்கை அணியும் தனது முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் பும்ரா புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இதன்மூலம் புதிய சாதனைகளை படைத்துள்ளார். பும்ரா டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 8வது முறையாகும். 29 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடியுள்ள பும்ரா இதுவரை 8 முறை 5 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்சில் கைப்பற்றியுள்ளார்.
இதற்கு முன்பு இதே அளவிலான டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை கபில்தேவ் மட்டுமே வைத்திருந்தார். தற்போது, அவரது சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஆல் ரவுண்டரான கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 23 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதுமட்டுமின்றி, பும்ரா டெஸ்ட் போட்டிகளில் 8 முறை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தாலும், இந்தியாவில் ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றுவது இதுவே முதன்முறை ஆகும். இதற்கு முன்பு அவர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய 7 முறையும் வெளிநாட்டு மண்ணிலே போட்டிகள் நடைபெற்றிருந்தது. இதனால், இலங்கைக்கு எதிரான இந்த போட்டியில் பும்ரா புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பும்ரா 29 டெஸ்ட் போட்டிகளில் 120 விக்கெட்டுகளையும், 70 ஒருநாள் போட்டிகளில் 113 விக்கெட்டுகளையும், 57 டி20 போட்டிகளில் 67 விக்கெட்டுகளையும், 106 ஐ.பி.எல். போட்டிகளில் 130 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போது, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.
மேலும் படிக்க : அதுக்குன்னு இப்படியெல்லாம் ரிவ்யூவா? ப்ளூசட்டை மாறனை லெஃப்ட் ரைட் வாங்கிய நடிகர் ஆரி!!
மேலும் படிக்க : கட்டாய திருமணம்.. சித்ரவதை.. சில்க் ஸ்மிதாவின் திருமண வாழ்க்கை இவ்வளவு கொடூரமானதா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்