மேலும் அறிய

IND vs SL, 3rd ODI: அபாரமாக பந்து வீசிய ஸ்ரேயஸ்; சர்ப்ரைஸ் ஆன விராட் கோலி..! வைரலாகும் வீடியோ..!

IND vs SL, 3rd ODI: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சுவரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. தற்போது அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

IND vs SL, 3rd ODI: இந்தியா -  இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சுவரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. தற்போது அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கீரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் பெறாத ஒருநாள் போட்டியாக இது அமைந்துள்ளது. 

இந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம் இந்திய அணி 3-0 என தொடரை முழுமையாக வென்றது மட்டும் இல்லாமல் இந்த போட்டியில் பல்வேறு சுவரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இந்த போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி 110 பந்துகளில் 13 பவுண்டரி 8 சிக்ஸர் உள்பட 166 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சதத்தின் மூலம் இலங்கை அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் ஏற்கனவே சச்சினுடன் சேர்ந்து பெற்றிருந்தாலும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதத்தின் எண்ணிக்கையை அவர் அதிகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இவர் இலங்கை அணிக்கு எதிராக 10 சதங்கள் விளாசியுள்ளார். 

இந்த போட்டியில் நடந்த மற்றொரு சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால், போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டு இருக்கையில் 18வது ஓவரினை இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் வீசினார். அப்போது இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்து இருந்தது. 18 ஓவரின் முதல் பந்தை ஸ்ரேயஸ் வீச அது குட் லெந்த்தில் பிட்ச் ஆகி அவுட் ஸ்விங் ஆனது. அப்போது ஃபர்ஸ் சிலிப்பில் நின்று கொண்டிருந்த விராட் கோலி ஆச்சரியமாக வாயில் கையை வைத்து தனது ரியாக்‌ஷனை வெளிப்படுத்த்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த போட்டி நடைபெற்ற நாளான நேற்று அதாவது ஜனவரி 15 என்பது விராட் கோலியின் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாளாக மாறியுள்ளது. அதாவது 2017ஆம் ஆண்டில் இதே நாளில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி 122 ரன்கள் எடுத்தார். 2018ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 153 ரன்கள் விளாசியிருந்தார்.  2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் 104 ரன்கள் எடுத்து இருந்தார். தற்போது 2023ஆம் ஆண்டிலும் அதே தேதியில் 160 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் விராட் கோலி. கோலியின் இந்த வித்தியாசமான சாதனை மூலம் இந்த நாளை கிரிக்கெட் உலகில் விராட் கோலி நாள் என அறிவிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget