மேலும் அறிய

Devdutt Padikal: அடுத்த டெஸ்டிலும் செஞ்சுரி.. 3ம் இடத்திற்கு நச்சுனு நங்கூரம் போடும் படிக்கல்! வலுவான நிலையில் இலங்கை!

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்டிலும் தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஆட்டத்தை தொடங்கினர். 

கேப்டன் கில் அபார அரைசதம்:

தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 18 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர், ஜெய்ஸ்வால் - தேவ்தத் படிக்கல் இருவரும் இணைந்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் நோக்கி நெருங்கிய ஜெய்ஸ்வால் 45 ரன்களுக்கு போல்டானார். பின்னர், ஜெய்ஸ்வால் - சுப்மன்கில் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் இணைந்து நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடினர். சிறப்பாக ஆடிய படிக்கல் விளாசினார். அரைசதத்தை கடந்தும் அவர் சிறப்பாக ஆடிய நிலையில், மறுமுனையில் கேப்டன் சுப்மன்கில் அரைசதம் விளாசினார். 50 ரன்கள் எடுத்த சுப்மன்கில் அஷிதா ஃபெர்னாண்டோ பந்தில் அவுட்டானார். அதன்பின்னர், வந்த ரிஷப் பண்ட் 3 ரன் எடுத்திருந்தபோது காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் அவுட்டானார்.

படிக்கல் சதம்:

பின்னர், ஜடேஜா படிக்கல்லுடன் இணைந்தார். சிறப்பாக ஆடிய படிக்கல் சதம் விளாசினார். முதல் டெஸ்டிலும் படிக்கல் சதம் விளாசிய நிலையில், இரண்டாவது டெஸ்டிலும் படிக்கல் சதம் விளாசியுள்ளார். இந்திய அணி மிடில் ஆர்டரில் 3வது இடத்திற்கு சரியான வீரர் இல்லாமல் தடுமாறி வந்த நிலையில், படிக்கல் தற்போது அடுத்தடுத்த டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த படிக்கல் 193 பந்துகளில் 117 ரன்கள் எடுத்த நிலையில் நுவந்தா பந்தில் போல்டானார். இந்த தொடரில் 3 இன்னிங்சில் பேட் செய்துள்ள படிக்கல் 2 சதங்களுடன் 328 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் 3வது வீரருக்கான இடத்தில் சாய் சுதர்சன் ஆடி வந்தார். தற்போது படிக்கல்லின் அபாரமான ஆட்டத்தால் சாய் சுதர்சனுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைப்பது சவாலாகியுள்ளது.

இந்திய அணியில் 2022ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் இடம் கிடைத்த வாய்ப்பை படிக்கல் அபாரமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

முதல் இன்னிங்சில் வலுவான ரன்களை குவிக்குமா?

படிக்கல்லின் இந்த அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. போட்டி நடந்து வரும் இந்த கொழும்பு மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் என்பதால் இந்திய அணி முதல் இன்னிங்சில் வலுவான ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணிக்காக ஜடேஜா - துருவ் ஜுரல் இருவரும் ஆடி வரும் நிலையில் சரன்ஷ் ஜெயின், மானவ் சுதர், சிராஜ், பிரசித் கிருஷ்ணா இன்னும் வெளியில் உள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget