மேலும் அறிய

Rohit Sharma: "மும்பை கா ராஜா.." மீண்டும் கேப்டனாகிறாரா ரோகித் சர்மா? குஷியின் உச்சியில் MI ஃபேன்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால், அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அணி மும்பை இந்தியன்ஸ். சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெயசூர்யா, பொல்லாக் போன்ற ஜாம்பவான்கள் அந்த அணிக்காக ஆடியிருந்தாலும் மும்பை அணியின் முகமாக ரசிகர்கள் மத்தியில் இருப்பவர் ரோகித் சர்மா.

பஞ்சாப் சென்ற பாண்ட்யா:

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கடந்த 3 சீசன்களாக மும்பை அணி ஆடியது. ஆனால், மும்பை அணி இதில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததும் மிக மோசமான தோல்வியையும் சந்தித்தது. மும்பை அணி நிர்வாகத்திற்கும் ஹர்திக் பாண்ட்யாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த சூழலில், ஹர்திக் பாண்ட்யாவை ட்ரேடிங் முறையில் பஞ்சாப் அணி வாங்கியது.

மீண்டும் கேப்டனாகிறாரா ரோகித் சர்மா?

இதனால், மும்பை அணியின் புதிய கேப்டன் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழலில், மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் வீரர் ஒருவர் கையில் தொப்பியுடன் இருக்கும் புகைப்படம் உள்ளது. அதுவும் தங்க நிறத்தில் அந்த புகைப்படம் உள்ளது. மேலும், 2017ம் ஆண்டு இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டத்தின்போது ஓடியது என்றும் பதிவிட்டுள்ளனர். அது 2017ம் ஆண்டு கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா மகிழ்ச்சியில் ஓடியதை குறிப்பிட்டே அதை பதிவிட்டுள்ளனர்.

அந்த புகைப்படம் ரோகித் சர்மாவுடையது என்றும், ரோகித் சர்மா மீண்டும் மும்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார் என்றும் ரசிகர்கள் தற்போது தொடர்ந்து யூகித்து வருகின்றனர். 2008ம் ஆண்டு முதல் கோப்பை வெல்லாமல் இருந்து வந்த மும்பை அணிக்கு ஐபிஎல் தொடங்கப்பட்ட பிறகு 5 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக கோப்பையை 2013ம் ஆண்டு வென்று தந்தவர் ரோகித் சர்மா. 

5 கோப்பைகள்:

ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020ம் ஆண்டு கோப்பையை வென்றது. மும்பையில் இருந்து ஒதுக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணிக்குச் சென்று அந்த அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதன்முறையிலே வெற்றி பெற வைத்தார். பின்னர், அவரை 2024ம் ஆண்டு மும்பை அணி மீண்டும் தங்களுக்கு வாங்கியது மட்டுமின்றி திடீரென கேப்டன்சியை அவரிடம் ஒப்படைத்தனர்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சியை ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கியது ரசிகர்கள் மத்தியில் ஆதங்கத்தை உண்டாக்கியது. அது அந்த சீசன் முழுவதும் போட்டியை காண வந்த ரசிகர்களிடம் எதிரொலித்தது.

இந்த சூழலில், மீண்டும் மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில்  281 போட்டிகளில் ஆடி 7 ஆயிரத்து 329 ரன்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக கொல்கத்தா அணிக்கு எதிராக 109 ரன்கள் விளாசியுள்ளார். மேலும், 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் 49 அரைசதங்கள், 2 சதங்கள் அடங்கும்.

ரோகித் சர்மா ஏற்பாரா?

இந்த புகைப்படம் மும்பை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் மும்பை அணியை ரோகித் சர்மா மீண்டும் வழிநடத்துவாரா? என்பது சந்தேகமே ஆகும். ஏனென்றால், அவருக்கு தற்போது 39 வயதாகிறது. ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா விடைபெறுவார் என்றே கருதப்படுகிறது. 

இந்த சூழலில் அணி நிர்வாகம் நீண்ட காலத்திற்கு கேப்டனாக செயல்படும் நபரையே நியமிக்க விரும்பும் என்று கருதப்படுகிறது. ரோகித் சர்மாவும் அதையே விரும்புவார் என்று கருதப்படுகிறது. இதனால், திலக் வர்மா கேப்டனாவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டால் ரோகித் சர்மா அவருக்கு தனது ஆலோசனைகளை வழங்கி அவருக்கு பக்கபலமாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
TN Weather News: சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
Toyota Hycross: அப்க்ரேடில் மாஸ் காட்டியதா ஹைக்ராஸ்? விலையில் வந்த மாற்றம் என்ன? அம்சங்கள், வசதிகள் OK-வா?
அப்க்ரேடில் மாஸ் காட்டியதா ஹைக்ராஸ்? விலையில் வந்த மாற்றம் என்ன? அம்சங்கள், வசதிகள் OK-வா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
TN Weather News: சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
Toyota Hycross: அப்க்ரேடில் மாஸ் காட்டியதா ஹைக்ராஸ்? விலையில் வந்த மாற்றம் என்ன? அம்சங்கள், வசதிகள் OK-வா?
அப்க்ரேடில் மாஸ் காட்டியதா ஹைக்ராஸ்? விலையில் வந்த மாற்றம் என்ன? அம்சங்கள், வசதிகள் OK-வா?
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Embed widget