IND vs SA : தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணியின் டெஸ்டின் சா(வே)தனை என்ன?
இந்தியா இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஏழு டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளது, அதில் 6 தொடர்களை இழந்துள்ளது, மீதமுள்ள ஒன்று டிராவில் முடிந்தது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 சுழற்சியின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் இதுவரை ஏழு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. இந்திய அணி கடைசியாக கடந்த 2018 ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து 2-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா சென்று இரண்டு முறை தொடரை வென்றது. அதேபோல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.ஒரு போட்டி கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் போட்டி சோதனை :
இந்தியா இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஏழு டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளது, அதில் 6 தொடர்களை இழந்துள்ளது, மீதமுள்ள ஒன்று டிராவில் முடிந்தது. இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் மொத்தம் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது, அதில் இந்தியா 3 வெற்றி, 10 தோல்வி. மீதமுள்ள ஏழு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்தன.
கடந்த 2010 சுற்றுப்பயணத்தில், செஞ்சூரியனில் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா முதல் இன்னிங்ஸில் வெறும் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 620/4d ரன்களை எடுத்தது.
தொடர்ந்து, ஃபாலோ ஆன் ஆன இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 459 ரன்கள் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.தென்னாப்பிரிக்காவின் 620/4d என்ற ரன் எண்ணிக்கை டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளுக்கு இடையேயான சிறந்த ஸ்கோர் ஆகும்.
இந்தியாவின் குறைந்த ஸ்கோர் :
1996 ம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெறும் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த சுற்றுப்பயணத்தின முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதுவரை தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இதுவே அணியின் குறைந்த ஸ்கோர் ஆகும்.
மேலும், இந்தியா இரண்டு இன்னிங்ஸ்களிலும் 100 மற்றும் 66 ரன்களுக்குச் சுருண்டது, 328 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்திய அணியில் அதிகபட்சமாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் 22 ரன்களுடன் அவுட் ஆகாமல் கடைசிவரை களத்தில் இருந்தார்.
1996-97ம் ஆண்டு நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்டில் முறையே 328 மற்றும் 282 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. அதேபோல், 2006 ம் ஆண்டு 174 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது. 2010ல் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அதிக முறை 0 இலக்க ரன்களில் அவுட் ஆனது யார் ?
தென்னாப்பிரிக்கா மண்ணில் இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரில் ஜாகீர் கான் 5 முறை 0 இலக்க ரன்களில் வெளியேறியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இஷாந்த் சர்மா (4 டக்), எஸ் ஸ்ரீசாந்த் (3 டக்) உள்ளனர். இதற்கிடையில், ஜஸ்பிரித் பும்ராவின் மோசமான சராசரி1.00.(2 டக்) பெற்றுள்ளார்.
ஹர்பஜன் சிங்கின் மோசமான சாதனை :
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர் என்ற தேவையற்ற சாதனையை படைத்துள்ளார். கடந்த2010 ஆம் ஆண்டு செஞ்சூரியனில் நடைபெற்ற போட்டியில் 4.69 சராசரியுடன் 36 ஓவர்களில் 169 ரன்களை விட்டு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்