IND vs SA: தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக ராகுல் நியமனம் - பிசிசிஐ
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள செஞ்சூரியன் மைதானத்தில் அந்த நாட்ட அணியுடன் வரும் 26-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது.

உலகக்கோப்பை டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடியது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதாக அறிவிக்கப்பட்டது.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள செஞ்சூரியன் மைதானத்தில் அந்த நாட்ட அணியுடன் வரும் 26-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது. இதற்காக, இந்திய அணி வீரர்கள் கடந்த டிசம்பர் 16-ம் தேதி விமானம் மூலம் தென்னாப்பிரிக்க புறப்பட்டு சென்றனர்.

துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா, காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். மும்பையில் நேற்று நடந்த பயிற்சியின்போது ரோகித்தின் இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவின் விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக பிரியாங்க் பஞ்சல் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கே.எல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், ரஹானாவிடம் துணை கேப்டன்சி பொறுப்பை ஒப்படைக்கும் திட்டம் இல்லை எனவும், அஷ்வின் இடமும் துணை கேப்டன்சி பொறுப்பை ஒப்படிக்கும் திட்டம் இல்லை எனவும் பிசிசிஐ வட்டாரம் தகவல் தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்த ராகுல், டெஸ்ட் கிரிக்கெட்டில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதை பிசிசிஐ உறுதிப்படுத்தி இருக்கிறது.
NEWS - KL Rahul named vice-captain of Test team for South Africa series.
— BCCI (@BCCI) December 18, 2021
KL Rahul replaces Rohit Sharma as vice-captain, who was ruled out of the Test series owing to a hamstring injury.
More details here - https://t.co/7dHbFf74hG #SAvIND | @klrahul11 pic.twitter.com/6pQPTns9C7
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ப்ரியாங்க் பஞ்சல், கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (WK), விருத்திமான் சாஹா (WK), ), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.
காத்திருப்பு வீரர்கள்: நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்ஜன் நாக்வாஸ்வாலா.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



















