Ind vs SA, 1 Innings Highlights: மிரட்டிய பவுலர்கள், சொதப்பிய ஓப்பனர்கள்... 2வது நாள் ஆட்டம் இந்தியாவுக்கு எப்படி இருந்தது?
IND vs SA, 3rd Test, Newlands Cricket Ground: இந்த இன்னிங்ஸில், 5 விக்கெட்டுகளை எடுத்தன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை எடுத்து மிரட்டி இருக்கிறார் பும்ரா.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. அதனை தொடர்ந்து விளையாடிய தென்னாப்ரிக்க அணி,17/1 என்ற நிலையில் 206 ரன்கள் பின்தங்கி இருந்தது.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் நடந்தது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்ரிக்க அணி வீரர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் ரன் எடுக்கவிடாமல் திணறடித்தனர். பேட்டர் கீகன் பெட்டர்சன் மட்டும் தனித்து நின்று ரன் சேர்த்தார். 72 ரன்கள் சேர்த்த அவர், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மற்ற பேட்டர்கள் சொதப்பலாகவே விளையாடினர். இந்திய அணி பந்துவீச்சாளர்களைப் பொருத்தவரை, பும்ரா 5 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனால், முதல் இன்னிங்ஸ் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் எடுத்து, 13 ரன்கள் பின் தங்கி இருந்தது.
இந்த போட்டியில் பதிவான ரெக்கார்டுகள்:
இந்த இன்னிங்ஸில், கேப்டன் கோலி இரண்டு கேட்சுகளைப் பிடித்தார். உமேஷ் யாதவ் பந்துவீச்சில் வான் டெர் டுசன் அடித்த பந்தை பிடித்த கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100வது கேட்சை பிடித்து அசத்தினார்.
A century of catches in whites for @imVkohli 👏👏#TeamIndia pic.twitter.com/tJIF5QMq1r
— BCCI (@BCCI) January 12, 2022
இந்த இன்னிங்ஸில், 5 விக்கெட்டுகளை எடுத்தன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை எடுத்து மிரட்டி இருக்கிறார் பும்ரா.
BOOM BOOM 🔥
— BCCI (@BCCI) January 12, 2022
7th 5-wkt haul in Test cricket for @Jaspritbumrah93 👏👏#TeamIndia #SAvIND pic.twitter.com/CYhZD86JsY
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்:
Stumps on Day 2!
— ICC (@ICC) January 12, 2022
An enthralling day of Test cricket ends with India going in at 57/2, a lead of 70.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxpgZ3 (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE2mW1 pic.twitter.com/w3qrs6YkLZ
தென்னாப்ரிக்காவை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸைப் போலவே ஓப்பனர்கள் ஏமாற்றம் அளித்தனர். ரபாடா பந்துவீச்சில் மயாங்க் (7) ரன்களுக்கு வெளியேற, ஜென்சன் பந்துவீச்சில் ராகுல் (10) வெளியேறினார். இதனால், புஜாரா மற்றும் கேப்டன் கோலி களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்