IND vs SA 3rd Test LIVE: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா !
IND vs SA 3rd Test, Day 4 LIVE Updates: கேப்டவுனில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையேயான கடைசி டெஸ்டின் அப்பேட்டகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்,
LIVE
Background
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி நிர்ணயித்துள்ள 212 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. இந்திய வீரர்கள் தங்களது பந்துவீச்சில் கட்டுக்கோப்பையும், விரைவில் விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்காவில் இந்தியா முதன்முறை டெஸ்ட் தொடரை வென்றது என்ற சாதனையையும், கேப்டவுன் மைதானத்தில் வெற்றி பெற்றது என்ற சாதனையையும் படைக்கலாம்.
தென்னாப்பிரிக்கா வெற்றி
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க வெற்றி பெற இன்னும் 12 ரன்கள் தேவை
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற இன்னும் 12 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
உணவு இடைவேளையின் போது தெ.ஆ. 171/3
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய நாளின் உணவு இடைவேளையின் போது தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
49 ஓவர்களின் முடிவில் தெ.ஆ. 156/3
49 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.
கீகன் பீட்டர்சென் விக்கெட்டை வீழ்த்திய ஷர்துல் தாகூர் !
தென்னாப்பிரிக்க வீரர் கீகன் பீட்டர்சென் விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.