IND vs SA 2nd T20 Live Streaming: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி மோதும் 2வது டி20 போட்டி.. எங்கே, எப்படி பார்ப்பது..? இதோ முழு விவரம்!
இந்திய அணி - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற உள்ளது.
பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே கடந்த புதன் கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 106 ரன்களுக்குள் சுருண்டது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 56 பந்துகளில் 51 ரன்களும், சூர்யகுமார் யாதவும் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிபெற செய்தனர்.
Snapshots from #TeamIndia's training session in Guwahati ahead of the 2nd T20I against South Africa.#INDvSA pic.twitter.com/vz6vc50ZO8
— BCCI (@BCCI) October 1, 2022
இந்தநிலையில், இந்திய அணி - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டி எங்கே, எப்போது, எதில் பார்க்கலாம் என்ற தகவலை கீழே காணலாம்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I எப்போது தொடங்கும்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I அக்டோபர் 2, ஞாயிறு இரவு 7:00 மணிக்கு தொடங்குகிறது. .
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I எங்கே நடக்கிறது?
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டி20 போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
2வது டி20 போட்டியை எந்த டிவி சேனலில் பார்க்கலாம்..?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
— BCCI (@BCCI) October 1, 2022
போட்டியை ஆன்லைனில் காண:
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I ஹாட்ஸ்டாரில் இரவு 7.00 மணி முதல் தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்கா சேனலில் பார்க்க :
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி மோதும் போட்டியை தென்னாப்பிரிக்காவில் SuperSports TV நெட்வொர்க்கில் காணலாம். அதேபோல், SS Grandstand, SS வெரைட்டி 4 மற்றும் SS கிரிக்கெட் போன்ற சேனல்களும் நேரலையில் வழங்குகிறது.
கணிக்கப்பட்ட இந்திய அணி ப்ளேயிங் லெவன் : ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர்
கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா ப்ளேயிங் லெவன் : குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், கிறிஸ்டியன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, அன்ரிச் நார்ட்ஜே