IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்கிறது.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்தியாவும் கைப்பற்றிய நிலையில் இன்று இரு அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நடக்கிறது.
இந்தியா பேட்டிங்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தோற்கும் 22வது டாஸ் இதுவாகும். டெஸ்ட் தொடரை இழந்தாலும் ஒருநாள் தொடரை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.
ஒடிசாவின் கட்டாக் நகரில் நடக்கும் இந்த போட்டியில் ரன்மழை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அணிக்கு பேட்டிங்கில் பலமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சுப்மன்கில், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, அக்ஷர் படேல் உள்ளனர்.
ப்ளேயிங் லெவன்:
பந்துவீச்சில் பும்ரா திரும்பியிருப்பது அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஆகும். அர்ஷ்தீப்சிங், பாண்ட்யா வேகத்தில் பக்கபலமாக இருப்பார்கள். வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல் சுழலில் வலுசேர்ப்பார்கள்.
தென்னாப்பிரிக்க அணிக்கும் பேட்டிங்கில் அனுபவம் வாய்ந்த மார்க்ரம், டி காக் ஆகியோருடன் ஸ்டப்ஸ், ப்ரெவிஸ், டேவிட் மில்லர், ஃபெரெய்ரா, யான்சென் பலமாக உள்ளனர். தென்னாப்பிரிக்க அணிக்கு பந்துவீச்சு பலமாக கேசவ் மகாராஜ், யான்சென், நோர்ட்ஜே, சிபாம்லா, நிகிடி உள்ளனர்.
பந்துவீச்சுதான் முக்கியம்:
இரு அணியைப் பொறுத்த மட்டில் சிறப்பாக பந்துவீசும் அணிக்கே வெற்றி வாய்ப்பு என்பது உறுதி. இந்திய அணியில் பும்ரா பந்துவீச்சில் திரும்பியுள்ளார். இது அணிக்கு மிகப்பெரிய பலமாகும். சொந்த மண்ணில் ஆடுவது, தென்னாப்பிரிக்க அணியை காட்டிலும் பந்துவீச்சில் பலமாக இருப்பது இந்திய அணிக்கு பலமாகும்.
மைதானம் பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும் என்பதால் சேசிங்கிலும் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த போட்டி இரு அணி ரசிகர்களுக்கும் விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக இந்த தொடர் நடக்கிறது.
இளம் வீரர்கள் ஜிதேஷ், அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஆகியோர் தங்களது இடத்தை நிரந்தரமாக்க தீவிர முனைப்புடன் ஆடுவார்கள். அதேபோல, அணியில் நிரந்தர இடம் கிடைக்க போராடி வரும் ஷிவம் துபேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கருதப்படுகிறது. அணிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பியுள்ள ஹர்திக் பாண்ட்யாவும் தன்னுடைய கம்பேக்கை கொடுப்பார் என்று கருதப்படுகிறது.




















