![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND vs AUS, Match Highlights: போராடித் தோற்ற இந்தியா; சஞ்சு சாம்சனின் முயற்சி வீண்!
IND vs AUS, 1st ODI, Ekana Sports City: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடித் தோற்றுள்ளது.
![IND vs AUS, Match Highlights: போராடித் தோற்ற இந்தியா; சஞ்சு சாம்சனின் முயற்சி வீண்! IND vs SA 1st ODI South Africa won the match by 9 runs against India at Ekana Sports City Stadium IND vs AUS, Match Highlights: போராடித் தோற்ற இந்தியா; சஞ்சு சாம்சனின் முயற்சி வீண்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/06/534e98753e396d23b8d30bb1e8087d4e1665077279516224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
IND vs SA 1st Oneday: இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றதற்கு பிறகு, ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 3.45 மணிக்கு லக்னோவில் தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக தாமதமாக போட்டி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்தியா தென் ஆப்ரிக்க அணிகள், இது வரை 87 போடிகளில் நேரடியாக மோதியுள்ளன. இதில் இந்திய அணி 35 போட்டிகளிலும், தென் ஆப்ரிக்க அணி 49 போட்டிகளிலும் வென்றி பெற்றுள்ளன. மூன்று ப்போட்டிகள் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த போட்டிகளில், இந்தியாவில் நடந்த போட்டிகளில் மட்டும் இந்திய அணி 15 போட்டிகளில் வென்றுள்ளது. அதேபோல், இந்தியாவில் நடந்த போட்டிகளில் தென் ஆப்ரிக்கா அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் போட்டிங்கை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி மிகவும் நிதானமாக விளையாடி வந்தது. சீரான இடைவெளில் விக்கெட்டுகள் விழுந்து வந்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய குயிண்டன் டி காக் அரை சதம் அடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ரவி பிஷ்னாய் பந்து வீச்சில் எல்.பி.டபுள்யூ ஆகி, 54 பந்துக்ளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
South Africa complete a win in Lucknow despite a late fightback from India 🙌🏻#INDvSA | Scorecard: https://t.co/MpAhJYqiUB pic.twitter.com/z5msNuqsJN
— ICC (@ICC) October 6, 2022
மிகவும் நிதானமாக விளையாடி வந்த தென் ஆப்ரிக்க அணி சார்பில் முதல் சிக்ஸரை ஐந்தாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேவிட் மில்லர் போட்டியின் 25 ஓவரில் அடித்தார். மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் மோசமான ஃபீல்டிங் மற்றும் பவுலிங்கால் ஆரம்பத்தில் தடுமாறி வந்த தென் ஆப்ரிக்க அணி அதன் பின்னர் வலுவான நிலைக்கு வந்தது.
தென் ஆப்ரிக்க அணியைப் பொறுத்தமட்டில் குயிண்டன் டி காக் 48 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும், க்லாசென் 74 ரன்களும் எடுத்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில், சர்ஹுல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், ரவி பிஷ்னாய் மற்றும் குல்தீப் சிங் யாதாவ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இந்தியாவுக்கு 250 ரன்கள் இலக்கினை தென் ஆப்ரிக்கா நிர்ணயித்துள்ளது. 40 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் விளாசியுள்ளது. ஐந்தாவது விக்கெட்டிற்கு கை கோர்த்த மில்லர் மற்றும் க்லாசென் அதிரடியாக விளையாடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர்.
40 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது. முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் பந்துகளை வீணடித்து வெளியேறினர். ஐந்தாவது விக்கெட்டுக்கு கை கோர்த்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. அதிரடியாக அரைசதம் கடந்த ஸ்ரேயஸ் உடனே அவுட் ஆனார்.
அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற போராடிய சஞ்சு சாம்சனின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. பரபரப்பான கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அதில் சஞ்சு சாம்சன் 20 ரன்கள் எடுத்து அணியின் தோல்வி வித்தியாசத்தினை 9 ரன்களாக குறைத்தார். சஞ்சு சாம்சன் கடைசிவரை களத்தில் நின்று 63 பந்தில் 86 ரன்கள் குவித்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்ரிக்காவின் நிகிடி 3 விக்கெட்டுகளும், ரபாடா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)