Ind vs Pak : பும்ராவின் 5 வருட சாதனை! 2 சிக்சர்கள் தான்! சல்லி சல்லியா நொறுக்கிய பாக் இளம் வீரர்
இளம் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், உலக நம்பர் 1 பந்துவீச்சாளரான பும்ராவையே அட்டாக் செய்தார். பும்ரா பந்துவீச்சில் இரண்டு சிக்சர்கள் அடித்து விளாசினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் பும்ராவின் 5 வருட சாதனைக்கு பாக் இளம் வீரர் முற்றுப்புள்ளி வைத்து அசத்தினார்.
இந்தியா vs பாகிஸ்தான்:
ஆசியக்கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது, இந்த தொடரில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
பும்ராவை அட்டாக் செய்த ஃபார்ஹான்:
போட்டியின் முதலாவது ஓவரில் சயிம் அயூப்பின் விக்கெட்டை பாண்டியாவும், அடுத்த ஓவரில் முகமது ஹாரிஸ் விக்கெட்டை பும்ரா எடுத்து பாக் அணியை 6/2 என்கிற நிலையில் தடுமாறியது.
ஆனால் யாரும் கணித்திராத வகையில், இளம் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், உலக நம்பர் 1 பந்துவீச்சாளரான பும்ராவையே அட்டாக் செய்தார். பும்ரா வீசிய 4-வது ஓவரின் மூன்றாவது பந்தை, வைட் லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார்.
அதோடு நிற்காமல், பும்ரா வீசிய 6-வது ஓவரில் அவர் மீண்டும் ஒரு அதிரடியான புல் ஷாட்டை பேக்வேர்ட் ஸ்கொயர் திசையில் பறக்கவிட்டு இரண்டாவது சிக்ஸரையும் அடித்து, இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்..
உடைக்கப்பட்ட சாதனை:
ஃபார்ஹானின் இந்த இரண்டு சிக்சர்கள் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக இது வரை ஒரு சிக்சர் கூட பும்ரா விட்டுக்கொடுத்ததில்லை என்கிற 5 வருட சாதனையை உடைத்தார் சாஹிப்சாதா ஃபார்ஹான். மேலும் பாகிஸ்தான் அணி பும்ராவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் சிக்சர் இதுவாகும்.
🚨 HISTORY AT DUBAI 🚨
— Muasharaf Parvaiz (@MuasharafP) September 14, 2025
Sahibzada Farhan becomes the first Pakistani batsman to hit a six against Jasprit Bumrah in any format. pic.twitter.com/SMMXs57XXT
இந்திய வெற்றி:
இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தது. குல்தீப், அக்ஷர், வருண் சுழலில் அசத்த பும்ரா, பாண்ட்யா வேகத்தால் அவர்கள் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இலக்கை துரத்திய இந்திய அணி கில் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினாலும், கேப்டன் சூர்யா, அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 15.5 ஓவர்களில் இந்தியா இலக்கை எட்டியது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஷிவம் துபே 7 பந்தில் 1 சிக்ஸருடன் 10 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.





















