IND vs NZ, T20 WC LIVE:நியூசிலாந்து அபார வெற்றி: நெருக்கடியே அளிக்காமல் இந்தியா தோல்வி
T20 WC 2021, Match 28, IND vs NZ: உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் முக்கியமான ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. அப்டேட்களை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
உலகோப்பை டி20 ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் இன்று முக்கியமான ஆட்டத்தில் விளையாடுகின்றன. டி20 உலககோப்பை உலககோப்பை கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்தை இந்தியா முதன்முறையாக வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
நியூசிலாந்து அபார வெற்றி: நெருக்கடியே அளிக்காமல் இந்தியா தோல்வி
இந்திய அணி நிர்ணயித்த 111 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 33 ரன்களுடனும், கான்வே 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அதிரடி காட்டிய டேரில் மிட்செல் அவுட்: இந்திய அணிக்கு ஆறுதல்
நியூசிலாந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்திய டேரில் மிட்செல் 35 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா
உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதன்முறையாக இந்த போட்டியில் பந்துவீசினார். அவர் ஐ.பி.எல். தொடரின் இரண்டாம் பாதியில் பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வலுவான நிலையில் நியூசிலாந்து : 1 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள்
இந்திய அணிக்கு எதிராக 111 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் நியூசிலாந்து அணி 8.3 ஓவர்களில் 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 66 ரன்களை எடுத்து வலுவாக உள்ளது.
நியூசிலாந்து பவர்ப்ளேவில் பொறுப்பான ஆட்டம் : 44 -1
நியூசிலாந்து அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 44 ரன்களுக்கு 1 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.