IND VS NZ 2nd Test:இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட்; எங்கே? எப்போது? முழு விவரம்!
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி எங்கே எப்போது நடைபெறுகிறது என்பது தொடர்பான தகவலை இங்கே பார்ப்போம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியுடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இச்சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி எங்கே எப்போது நடைபெறுகிறது என்பது தொடர்பான தகவலை இங்கே பார்ப்போம்:
இந்தியா மற்றும் நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி எங்கு நடைபெறும்?
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி எப்போது?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 24-ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்தியா vs நியூசிலாந்து 2வது டெஸ்டை எங்கே பார்க்கலாம்?
இந்தியா vs நியூசிலாந்து 2வது டெஸ்ட் ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதேபோல் ரசிகர்கள் JioCinema ஆப் மற்றும் இணையதளத்தில் லைவ்ஸ்ட்ரீங்கில் பார்க்கலாம்.
இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சர்பராஸ் கான், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் , ஆகாஷ் தீப், துருவ் ஜூரல்.
நியூசிலாந்து அணி:
டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மாட் ஹென்றி, டிம் சவுத்தி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓரூர்கே, கேன் வில்லியம்சன், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி.