மேலும் அறிய

IND vs NZ 3rd T20: இதெல்லாம் ஒரு டார்கெட்டா! 10 ஓவரிலே 155 ரன்களை எட்டியது.. தொடரை வென்ற இந்தியா!

IND vs NZ: நியூசிலாந்து அணி நிர்ணயித்த 154 ரன்களை 10 ஓவர்களிலே எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடி வருகிறது. ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி வெற்றி பெற்றது. 

154 ரன்கள் டார்கெட்:

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் மோதும் 3வது போட்டி கவுகாத்தியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியை இந்திய அணி பந்துவீச்சில் சவால்  அளித்தது. இதனால், இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இஷான் அதிரடி:

மைதானம் சேசிங்கிற்கு ஒத்துழைக்கும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் முதல் பந்திலே சாம்சன் ஹென்ரி பந்தில் போல்டானார். இதையடுத்து, அபிஷேக் சர்மா - இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர். 

இருவரும் ஆட்டத்தை முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் எடுத்தனர். இஷான் கிஷான் சந்தித்த 2வது பந்தையும், 3வது பந்தையும் சிக்ஸருக்கு விளாசினார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த அபிஷேக் சர்மாவும் சிக்ஸருடனே ஆட்டத்தை தொடங்கினார். இவர்கள் அதிரடியால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. 

14 பந்துகளில் அபிஷேக் அரைசதம்:

இதனால், 4வது ஓவரிலே சுழலை கொண்டு வந்தார் கேப்டன் சான்ட்னர். சோதி வீசிய சுழலுக்கு இஷான் கிஷன் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 13 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் அவுட்டானார். அதன்பின்பு, அபிஷேக் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 

அபிஷேக் சர்மா யார் பந்துவீசினாலும், பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். இதனால், ரன் ரேட் அதே வேகத்தில் சென்றது. அவருக்கு பக்கபலமாக சூர்யகுமார் யாதவ் அவ்வப்போது பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இந்திய அணிக்காக அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் விளாசினார். 

7 ஓவரிலே 100 ரன்கள்:

இந்திய அணி 7வது ஓவரிலே 100 ரன்களை கடந்தது. ஹென்ரி, ஜேக்கப் டஃபி, ஜேமிசன், இஷ் சோதி, கேப்டன் சான்ட்னர் என யார் வீசினாலும் அதிரடி காட்டினர். மைதானத்தில் பனியின் தாக்கமும் இருந்ததால் பந்துவீச்சாளர்கள் பந்துவீச மிகவும் சிரமப்பட்டனர். இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. 

10 ஓவர்களில் வெற்றி:

மைதானத்தில் எந்தவொரு தாக்கத்தையும் நியூசிலாந்து அணியால் ஏற்படுத்த முடியவில்லை. மறுமுனையில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்திய அணி 10 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றது. 

அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இரு தரப்பு தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் 9வது டி20 தொடர் வெற்றி இதுவாகும். 

ஜேக்கப் டஃபி 2 ஓவர்களில் 38 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஹென்ரி , சோதி, சான்ட்னர் ஆகியோர் 2 ஓவர்களில் தலா 28 ரன்களை விட்டுக்கொடுத்தனர். 

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget