IND vs NZ 2nd T20 LIVE: தீபக்ஹூடா அபார பவுலிங்..! 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!
IND vs NZ 2nd T20 LIVE Updates: அதிரடியாக ஆடி வந்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
LIVE
Background
IND vs NZ 2nd T20; இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று மதியம் நண்பகல் 12 மணிக்கு பே ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்திய அணிக்கு நியூசிலாந்து நாட்டிற்கு பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று மதியம் 12 மணிக்கு நியூசிலாந்து நாட்டில் உள்ள பே ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ள இரண்டாவது டி20 போட்டியானது தொடரை வெல்ல இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக உள்ளது.
டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணைக் கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோருக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின்மூலம் ஒட்டுமொத்த பார்வையும் இளம் இந்திய வீரர்களின் மீது திரும்பியுள்ளது. இன்றைய போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய உம்ரான் மாலிக் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இணைந்து பந்துவீச இருக்கின்றனர்.
📸 📸 Snapshots from #TeamIndia's traditional welcome at Mt. Maunganui
— BCCI (@BCCI) November 19, 2022
Image Courtesy: Jamie Troughton/Dscribe Media#NZvIND pic.twitter.com/K4yUiScPO7
அதேபோல், நீண்டநாள் காத்திருப்புக்கு பிறகு இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் தங்கள் திறமைகளை இந்த தொடரின் மூலம் நிரூபிக்க மீண்டு ஒரு நல்வாய்ப்பு எனலாம். மேலும், சுப்மன் கில் முதல் முறையாக டி20 தொடருக்கான அழைப்பை பெற்றுள்ளார்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணிக்கு ரிஷப் பந்த் துணை கேப்டனாக உள்ளார். வருங்கால இந்திய அணியை கருத்தில்கொண்டு தற்போது மிகப்பெரிய மாற்றங்களை பிசிசிஐ செய்து வருகிறது. இந்திய அணியின் தேர்வுக் குழு ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இளம் படை மீது பெரும் கவனம் குவிந்துள்ளது.
இதுவரை நேருக்குநேர்:
விளையாடிய போட்டிகள்: 22
இந்தியா வெற்றி: 11
நியூசிலாந்து வெற்றி: 9
முடிவு இல்லை: 2
ரெக்கார்ட்ஸ்:
- நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் : ரோகித் சர்மா (511)
- இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள் : கொலின் முன்ரோ (426)
அதிக விக்கெட்கள் :
- ஜஸ்பிரித் பும்ரா - 12
- இஷ் சோதி - 20
இந்திய அணி: சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐய் , குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல்
நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி
தீபக் ஹூடா அபாரம்..! 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!
இந்திய அணியின் அபார பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.
தீபக் ஹஸ்ரீ
இந்திய அணியின் அபார பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.
ஆட்டமிழந்தார் வில்லியம்சன்
நியூசி., கேப்டன் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது சிராஜ் வீசிய பந்தில் அவர் போல்டு ஆனார்.
வில்லியம்சன் அரை சதம்
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார்.
A fifty for skipper Kane Williamson 👊
— ICC (@ICC) November 20, 2022
Watch the #NZvIND series live on https://t.co/MHHfZPQi6H (in select regions) 📺 pic.twitter.com/0VaSOAluUi
17 ஓவர்கள் முடிவில்...
17 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 11 ரன்கள் குவித்துள்ளது.