IND vs NZ: முதல் டெஸ்டில் அறிமுகமாகும் ஷ்ரேயாஸ்... வாய்ப்பை வாரி வழங்கிய ரஹானே!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுகமாக இருப்பதாக இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 போட்டிகளையும் வென்று டி20 தொடரை கைப்பற்றியது. அதனை அடுத்து, டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்க உள்ளது.
📸 📸 When #TeamIndia hit the ground running in Kanpur ahead of the 1st #INDvNZ Test. @Paytm pic.twitter.com/qbMejsdzxW
— BCCI (@BCCI) November 23, 2021
முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரஹானே கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில், தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல் ராகுல் விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெஸ்ட் தொடரில் ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியின் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
NEWS - Suryakumar Yadav replaces KL Rahul in India's Test squad.
— BCCI (@BCCI) November 23, 2021
KL Rahul has sustained a muscle strain on his left thigh and has been ruled out of the upcoming 2-match Paytm Test series against New Zealand.
More details here -https://t.co/ChXVhBSb6H #INDvNZ @Paytm pic.twitter.com/uZp21Ybajx
இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுகமாக இருப்பதாக இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்திய அணியில் அறிமுகமாகும் 303 வது வீரர் என்ற பெருமை ஷ்ரேயாஸ் ஐயர் பெற இருக்கிறார்.
மும்பையை சேர்ந்த 26 வயதான ஷ்ரேயாஸ் ஐயர் 54 முதல்தர போட்டிகளில் விளையாடி 12 சதங்கள், 23 அரைசதங்கள் உள்பட 4592 ரன்கள் குவித்துள்ளார்.
அஜிங்கே ரஹானே (கேப்டன்), புஜாரா (துணை கேப்டன் ), சூர்யகுமார் யாதவ், மயங்க் அகர்வால், சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், விருத்திமான் சஹா, கே.எஸ்.பரத், ஜடேஜா, ரவி அஸ்வின், அக்சர் பட்டேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசாத் கிருஷ்ணா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கீரின் பார்க் மைதானத்தில் வருகின்ற நவம்பர் 25 ம் தேதி தொடங்கி 29 வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டியானது மும்பையில் உள்ள புகழ்மிக்க வான்கேடே மைதானத்தில் வருகிற டிசம்பர் 3 ம் தேதி தொடங்கி 7 ம் தேதி வரையும் நடைபெற இருக்கிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்