Bhuvaneshwar Kumar: 4 விக்கெட் இருந்தாபோதும்.. உலக சாதனைதான்.. பட்டியலில் காத்திருக்கும் புவனேஷ்வர் குமார்.. எதில் தெரியுமா?
நியூசிலாந்து தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்த தொடரில் புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்திய அணிக்கு நியூசிலாந்து நாட்டிற்கு பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியானது இன்று மதியம் 12 மணிக்கு நியூசிலாந்து நாட்டில் உள்ள வெலிங்டனில் தொடங்க இருக்கிறது.
டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணைக் கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோருக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், உம்ரான் மாலிக், முகமது சிராஜ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்தநிலையில், நியூசிலாந்து தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்த தொடரில் புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைக்க புவனேஷ்வர்குமாருக்கு 4 விக்கெட்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இந்திய அணிக்காக புவனேஷ்வர் குமார் இந்தாண்டு 36 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இந்தநிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களை வீழ்த்தினால் நடப்பு காலண்டர் வருடத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை புவனேஷ்வர்குமார் படைப்பார்.
Bhuvi will be biggest game changer in 1st T20l becouse Bhuvneshwar Kumar has picked 36 T20I wickets this year - only two bowlers have a better tally. #INDvsNZ#NZvINDonPrime pic.twitter.com/YD94kLg7pF
— Sonu yadav (@Sonugggg) November 17, 2022
முன்னதாக, இந்தாண்டு அயர்லாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில் 26 போட்டிகள் விளையாடி 39 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஜோசுபா லிட்டில் ஹாட்ரிக் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் நேபாளத்தை சேர்ந்த சந்தீப் லாமிச்சானே 38 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
முன்னதாக, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை புவனேஷ்வர் குமார் பெற்றார். இவர் இந்திய அணிக்காக இதுவரை 85 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணி: சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐய் , குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல்
நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி