IND vs HK Score LIVE: 14 ஓவர் முடிவில் ஹாங்காங் அணி : 98/3
ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதும் ரன் எண்ணிக்கையை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள abp நாடு பக்கத்தில் இணைந்திடுங்கள்..
LIVE
Background
ஆசிய கோப்பைத் தொடரில் குரூப் ஏ பிரிவில் இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. ஹாங்காங் அணியுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி வலுவான அணியாகவே உள்ளது. இருப்பினும், டி20 போட்டியில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதால் இந்திய அணி தனது முழு பலத்துடனே ஆட முயற்சிக்கும்.
ஹாங்காங் அணி சிறிய அணியாக இருந்தாலும் இந்தியா போன்ற மிகப்பெரிய அணிக்கு எதிராக தன்னுடைய முழு திறமையையும் வெளிக்காட்ட ஆர்வத்துடன் இருக்கும். அந்த அணியினர் சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை டி20 தகுதிச்சுற்றுத் தொடரில் ஆடியது அந்த அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த போட்டியில் முதல் பந்திலே ஆட்டமிழந்த கே.எல்.ராகுல் இந்த போட்டியில் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம் ஆகும். கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியை இந்த போட்டியில் காணலாம் என்று எதிர்பார்க்கலாம். கடந்த போட்டியில் 35 ரன்கள் விளாசிய விராட்கோலி இந்த போட்டியில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ககின்றனர். தினேஷ்கார்த்திக் மீண்டும் இன்று களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த போட்டியில் அசத்திய ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா இந்த போட்டியிலும் கலக்குவார்கள் என்று நம்பலாம். கடந்த போட்டியில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ் இன்றைய போட்டியில் கலக்குவார் என்று நம்பலாம். ஹாங்காங் அணியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நிஷாகத் கான், ஸ்காட் மெக்கெக்னி, யாசிம் முர்டாசா, பாபர் ஹயாத் உள்ளனர்.
கடந்த போட்டியில் பந்துவீச்சில் அசத்திய புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப்சிங் இந்த போட்டியிலும் பந்துவீச்சில் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஹாங்காங் அணியில் அப்தாப் ஹூசைன், வாஜித் ஷா, முகமது வாஹீத், அதீக் இக்பால் ஆகியோர் சிறப்பாக பந்துவீசுவார்கள் என்று நம்பலாம். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு குரூப் ஏ அணி பிரிவில் முதல் அணியாக முன்னேறிவிடும். கடந்த போட்டியில் இந்திய அணிக்காக ஆடாத ரிஷப்பண்ட், தீபக் ஹூடா, பிஷ்னோய் ஆகியோருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங்காங் அணிக்கு தண்ணி காட்டிய ரோகித் படை.. 40 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!
ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IND vs HK Score LIVE: 14 ஓவர் முடிவில் ஹாங்காங் அணி : 98/3
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஹாங்காங் 14 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.
IND vs HK Score LIVE: 10 ஓவர் முடிவில் ஹாங்காங் அணி : 65/2
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஹாங்காங் 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது
அசால்ட்டாக 6 ஓவர்களில் 50 ரன்களை கடந்த ஹாங்காங் அணி..!
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஹாங்காங் 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவிற்கு அச்சத்தை காட்டும் ஹாங்காங்..!
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஹாங்காங் 5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் குவித்துள்ளது.