IND vs ENG Semi Final T20 WC: நாங்கள் விரும்பியதைச் செய்ய இது ஒரு வாய்ப்பு... அரையிறுதி குறித்து மனம் திறந்த கேப்டன் ரோகித்!
கடந்த போட்டிகளை போலவே, நாளைய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலககோப்பை டி20 போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
நாளை நடைபெற இருக்கும் இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி வருகிற ஞாயிற்றுகிழமை பாகிஸ்தான் அணியுடன் மோதும். இங்கிலாந்து இடையிலான நாளைய போட்டியில் இந்தியா அணி வெற்றிபெறும் பட்சத்தில், உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் இந்தியாவும் சந்திக்கும்.
இந்த நிலையில், நாளை நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசினார். அப்போது அவர், “ டி20 கிரிக்கெட் தொடரின் தன்மை குறித்து எங்களுக்கு நன்றாக தெரியும், இங்கிலாந்து நாட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை வீழ்த்துவது கடினமானது. அதையும் நாங்கள் செய்தோம். அந்த வெற்றி எங்களுக்கு புது நம்பிக்கை தரும்.
🗣️🗣️ #TeamIndia captain @ImRo45 ahead of the semifinal clash in the #T20WorldCup against England. #INDvENG pic.twitter.com/GLRCWAvO5f
— BCCI (@BCCI) November 9, 2022
நாங்கள் விரும்பியதைச் செய்ய இது ஒரு வாய்ப்பு. இந்த டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம். கடந்த போட்டிகளை போலவே, நாளைய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
நாக் அவுட் விளையாட்டுகள் முக்கியம். நாக் அவுட் விளையாட்டில் சிறப்பாகச் செயல்படுவது அவசியம். ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வது மிகவும் முக்கியம். வீரர்களாகிய நாம் விளையாடுவதும், நம்மைப் பற்றி பெருமை கொள்வதும் முக்கியம். நாங்கள் எங்கிருந்து வந்தோம். நாளை (வியாழன், நவம்பர் 10) முடிவைப் பெற நாம் நன்றாக விளையாட வேண்டும். நீங்கள் நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால், அது உங்களுக்கு நம்பிக்கையைத் தரும். முதலிடம் பெற அவர்களை (இங்கிலாந்து) விட நாங்கள் சிறப்பாக இருக்க வேண்டும். ஆட்டத்தை வெல்வதற்கு நாம் சிறந்த முறையில் செயல்பட வேண்டும்.” என்றார்.