மேலும் அறிய

IND vs ENG: இந்த விவாதம் எதுக்கு என்று புரியவில்லை..கோலி குறித்த கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் மொயின் அலி 47 ரன்களும், வில்லே 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்காரணமாக இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அடுத்து ஆடிய இந்திய அணி ரீஸ் டாப்லே வேகத்தில் இந்திய அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்திய அணியின் தோல்வி மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா சில கருத்துகளை தெரிவித்துள்ளார். 

அதில், “எத்தனை முறை தான் விராட் கோலி தொடர்பான கேள்வியை கேட்பீர்கள். இது தொடர்பான விவாதம் ஏன் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. அவர் இந்திய அணிக்காக அவ்வளவு ரன்கள் அடித்துள்ளார். அவருடைய சராசரி மற்றும் சதங்களை பார்த்தால் நமக்கு தெரியும். அவருடைய அனுபவம் மிகவும் முக்கியமான ஒன்று.  ஒரு வீரரின் வாழக்கையில் எப்போதும் சில இறங்கு முகங்கள் இருக்கும். அது அவருடைய சொந்த வாழ்க்கையிலும் இருக்கும். 

அவர் இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக பல போட்டிகளில் விளையாடி வருகிறார். அவர் ஒரு சிறப்பான வீரர். அதை அவர் மீண்டும் நிரூபிக்க தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை இவர் மீண்டும் ஃபார்மிற்கு திரும்ப ஒரிரு நல்ல இன்னிங்ஸ் போதுமான ஒன்று அதுவே என்னுடைய எண்ணமாக உள்ளது. நன்றாக கிரிக்கெட் விளையாட்டை பின் தொடர்பவர்களும் இதேயே நினைப்பார்கள் என்று கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கபில்தேவ் இடம் கேட்கப்பட்டது. அதற்கு கேப்டன் ரோகித் சர்மா, “அவர் வெளியே இருந்து போட்டியை பார்த்து வருகிறார். அவருக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாது. நாங்கள் அணியை கட்டமைப்பதற்கு பின்பாக பல விஷயங்கள் உள்ளன. வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். இது பற்றி வெளியே இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே வெளியே நடப்பது எதுவும் எங்களுக்கு முக்கியமானதில்லை. 

ஒரு வீரரின் ஃபார்ம் எப்போதும் ஒரு மாதிரியாக இருக்காது. அதில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது வழக்கம். ஒரு வீரர் பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடி வந்த பின்பு ஒரிரு தொடர்களில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவர் நல்ல வீரராக இல்லை என்று கூற முடியாது. அவருடைய கடந்த கால ஃபார்மை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. அணியிலுள்ள எங்களுக்கு வீரரின் முக்கியத்துவம் தெரியும். இதுப்பற்றி வெளியே இருப்பவர்கள் பேசலாம். ஆனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட தேவையில்லை”  எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Embed widget