IND vs ENG: சச்சின் -கங்குலிக்கு பிறகு சாதனைப் பட்டியலில் இணைந்த ரோகித்-ஷிகர் தவான் ஜோடி-என்ன சாதனை தெரியுமா?
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித்-ஷிகர் தவான் ஜோடி 5000 ரன்களுக்கு மேல் எடுத்து அசத்தியுள்ளது.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 76* ரன்களும், ஷிகர் தவான் 31* ரன்களும் எடுத்தனர். இதனால் 18.4 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி ரோகித்-ஷிகர் தவான் ஜோடியாக 18வது முறையாக சதம் கடந்து அசத்தியுள்ளார். மேலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்த ஜோடி 5000 ரன்களை கடந்து அசத்தியுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்களாக 5000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது இந்திய ஜோடி என்ற பெருமையை ரோகித் சர்மா-ஷிகர் தவான் பெற்றுள்ளது.
ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோடி:
தொடக்க ஜோடி | இன்னிங்ஸ் | ரன்கள் | சதம் | அரைசதம் |
சச்சின்-சவுரவ் கங்குலி | 132 | 6609 | 21 | 23 |
கில்கிறிஸ்ட்-ஹேடன் | 114 | 5372 | 16 | 29 |
க்ரீண்ட்ஜ்-ஹெய்ன்ஸ் | 102 | 5150 | 15 | 24 |
ரோகித்-ஷிகர் | 112 | 5108 | 18 | 15 |
ஆம்லா-டி காக் | 93 | 4198 | 11 | 14 |
ஒருநாள் போட்டிகளில் அதிக முறை சதம் கடந்த ஜோடிகள்:
சச்சின் டெண்டுல்கர்-சவுரவ் கங்குலி- 26 முறை
தில்ஷன் - சங்ககாரா-20 முறை
ரோகித்-விராட்- 18 முறை
ரோகித்-ஷிகர்-18 முறை
கில்கிறிஸ்ட்-ஹேடன் 16 முறை
ரோகித் சர்மா-ஷிகர் தவான் ஜோடி ஒருநாள் போட்டிகளில் அதிக முறை சதம் கடந்த ஜோடிகள் பட்டியலிலும் முன்னேறியுள்ளது. இவர்கள் இருவரும் 18 முறை ஒருநாள் போட்டிகளில் ஜோடியாக சதம் கடந்து அசத்தியுள்ளனர். ரோகித் சர்மா-விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து ஒருநாள் போட்டியில் 18 முறை ஜோடியாக சதம் கடந்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்