மேலும் அறிய

IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!

இங்கிலாந்தில் தற்போது ஆடி வரும் இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றிக்காக 259 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட்  அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வருகிறது. அயர்லாந்து அணியுடன் டி20 கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணி இங்கிலாந்து அணியுடனான டி20 தொடரையும் இழந்தது.

மிரட்டல் பவுலிங்:

இந்த சூழலில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பர்மிங்காமில் நடந்து வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பிய நிலையில் நடந்த இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு டக்கெட் பந்துகளுக்கு ஏற்ப ரன்கள் எடுக்க ஜேக்கப் பெத்தேல் தடுமாறினார். அவர் மிகவும் நிதானமாக ஆட டக்கெட் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார்.

தடுமாறிய ஜேக்கப் பெத்தேலை இளம் பந்துவீச்சாளர் குர்னூர் ப்ரார் அவுட்டாக்கினார். அவர் 14 ரன்களில் அவுட்டாக டக்கெட் - ஜோ ரூட் ஜோடி சேர்ந்தனர். பெத்தேல் அவுட்டான உடனே டக்கெட்டும் 45 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்தடுத்து விக்கெட்:

அதன்பின்னர் வந்த கேப்டன் ஹாரி ப்ரூக் 1 ரன்னிலும், அபாயகரமான பேட்ஸ்மேன் பட்லர் 5 ரன்னிலும் அவுட்டாக, ஆல்ரவுண்டர் சாம்கரண் டக் அவுட்டானார். 60 ரன்களுக்கு விக்கெட்டே இழக்காமல் இருந்த இங்கிலாந்து 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அதிரடி ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் 20 ரன்னில் அவுட்டாக, 21.4 ஓவரில் 107 ரன்களுக்கு இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து, இங்கிலாந்து எளிதில் சுருண்டு விடும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு லியாம் டாவ்சன் - ஜோ ரூட் ஜோடி மிகப்பெரிய தலைவலியாக மாறியது. ஆட்டத்தில் நங்கூரமிட்டு அபாரமாக பேட் செய்தனர். பும்ரா, பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், அக்ஷர் படேல் என அனைவரையும் சிறப்பாக எதிர்கொண்டனர். 7வது விக்கெட்டிற்கு உள்ளே வந்த லியாம் டாவ்சன் பொறுப்பாக ஆட ஜோ ரூட்டும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். 

டாவ்சன் - ஜோ ரூட்:

இருவரும் அபாரமாக ஆடி அரைசதம் விளாசினர். அபாரமாக ஆடி இங்கிலாந்தை 200 ரன்களை கடக்க வைத்த நிலையில் லியாம் டாவ்சன் அவுட்டானார். 83 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்து அக்ஷர் படேல் பந்தில் அவுட்டாக்கினார். 7வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 121 ரன்களை எடுத்தனர். 

பின்னர், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ 47.5 ஓவர்களுக்கு 258 ரன்கள் எடுத்து இங்கிலாந்து ஆல் அவுட்டானது. ஜோ ரூட் கடைசி வரை அவுட்டாகாமல் 76 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணிக்காக அக்ஷர் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இளம் வீரர் குர்னூர் ப்ரார், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பும்ரா 9 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 1 விக்கெட் வீழ்த்தினார்.

259 ரன்கள் டார்கெட்:

இந்திய அணி தற்போது 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வருகிறது. இந்திய அணி இந்த தொடரில் இதுவரை ஒரு வெற்றியைக்கூட பெறாத சூழலில், இந்திய அணி முதல் வெற்றி பெறும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget