மேலும் அறிய

Vaibhav Sooryavanshi: அதிவேக இரட்டை சதம் விளாசியதற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த சூர்யவன்ஷி!

ஆசிய கோப்பைத் தொடரில் இரட்டை சதம் விளாசியதற்கு யுவராஜ்சிங் அளித்த ஆலோசனையே காரணம் என்று சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

தோஹாவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஏ அணியும், ஐக்கிய அரபு அமீரகமும் மோதியது. 

53 பந்தில் 204 ரன்கள்:

இதில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 249 ரன்களை குவித்துள்ளது. இதில் ஹர்ப்ரீத் சிங் பாட்டியா 130 ரன்கள் தனி ஆளாக விளாசினார். ஓரளவு சவாலான இலக்கை நிர்ணயித்த நிம்மதியுடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணியின் நிம்மதியை சூர்யவன்ஷியை துவம்சம் செய்தார். 

அவர் 53 பந்துகளில் 7 பவுண்டரி 28 சிக்ஸர்களுடன் 204 ரன்கள் எடுத்து புதிய வரலாறு படைத்தார். 15 வயதே ஆன சூர்யவன்ஷியின் இந்த சாதனை உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

சாதனை நிகழ்ந்தது எப்படி?

சூர்யவன்ஷிக்கு அனைவரும் பாராட்டைத் தெரிவித்து வரும் நிலையில், தன்னுடைய இந்த சாதனை நிகழ்ந்தது எப்படி? என்று சூர்யவன்ஷி மனம் திறந்து பேசியுள்ளார். போட்டிக்கு பிறகு அவர் அளித்துள்ள பேட்டியில், தான் கடந்த போட்டிகளில் சிரமத்தைச் சந்தித்து வந்த நிலையில் அதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங்கிடம் அறிவுரை பெற்றுள்ளார். 

சுமார் ஒன்றை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது யுவராஜ்சிங் சூர்யவன்ஷியின் பல்வேறு சிரமங்களில் இருந்து மீள்வதற்கு பதிலளித்துள்ளார். குறிப்பாக, களத்தில் முதல் 20 பந்துகளை நீடித்துவிட்டால் வேறு மாதிரியான ரன்களை பார்க்க முடியும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். 

யுவராஜ்சிங்கின் இந்த ஆலோசனையை வேத வாக்காக எடுத்துக்கொண்ட சூர்யவன்ஷி ரன்களை விளாசித் தள்ளினார். மேலும், ருத்ரதாண்டவம் ஆடும் சூர்யவன்ஷி புதிய வரலாற்றைப் படைத்துள்ளார். 28 பந்துகளில் 100 ரன்களை விளாசிய சூர்யவன்ஷி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரட்டை சதம் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளார். 

யுவராஜ்சிங்கிற்கு வாழ்த்து:

எதிர்கால இந்திய அணியை நீண்ட காலம் தனது தோளில் சுமக்கும் வீரராக சூர்யவன்ஷியை இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்க்கின்றனர். பல்வேறு சாதனையை சூர்யவன்ஷி படைப்பதற்கு யுவராஜ்சிங் வழங்கிய ஆலோசனை உதவிகரமாக இருந்ததற்கு யுவராஜ்சிங்கிற்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யுவராஜ்சிங் இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பையை வெல்ல உதவிகரமாக இருந்தவர். கங்குலி மற்றும் தோனி வெற்றிகரமான கேப்டனாக இருந்ததற்கு மிகப்பெரிய தூணாக திகழ்ந்தவர் யுவராஜ்சிங்.

சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ்சிங் 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1900 ரன்கள் விளாசியுள்ளார் 304 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 701 ரன்களும், 58 டி20 போட்டிகளில் ஆடி 1177 ரன்கள் விளாசியுள்ளார். 132 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 750 ரன்கள் விளாசியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள், ஒருநாள் போட்டியில் 14 சதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 111 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 28 விக்கெட்டுகளும், ஐபிஎல் தொடரில் 36 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2027 Mini Auction: தெறிக்குது சியா என்ட்ரி... மினி ஏலத்தில் பங்கேற்கும் சேவாக் வாரிசு! விலை எவ்ளோ?
IPL 2027 Mini Auction: தெறிக்குது சியா என்ட்ரி... மினி ஏலத்தில் பங்கேற்கும் சேவாக் வாரிசு! விலை எவ்ளோ?
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
Udhayanidhi:
Udhayanidhi: "இந்தியாவிலே இல்லாத கேவலம்.. சிபிஐ விசாரணை வேண்டும்.." கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
TN Investment: 200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
Manickam Tagore: ”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
Embed widget