மேலும் அறிய

IND vs BAN 2nd Test: பயமுறுத்திய பங்களாதேஷ்: அசால்ட்டாக அதிர வைத்த அஸ்வின்: தொடரை கைப்பற்றிய இந்தியா!

ஷ்ரேயஸ் ஐயர்- அஸ்வின் ஜோடி வங்கதேசத்தின் பந்துவீச்சில் அஸ்திவாரத்தை ஆட்ட தொடங்கினர். இருவரும் தேவையான நேரத்தில் பந்துகளை பவுண்டரிகளுக்கு ஓடவிட்டு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை டாக்கா மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் மொமினுல் ஹக் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி  அவர் 157 பந்துகளை எதிர்கொண்டு 84 ரன்கள் குவித்தார். பிற வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் அவுட்டாக, வங்கதேச அணி 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது. 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய  இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது. இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் 10 ரன்களும், சுப்மன் கில் 20 ரன்களும், புஜாரா, விராட்கோலி தலா 24 ரன்களும் எடுத்து அவுட்டாயினர். தொடர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஐந்தாவது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடினர். 

இருவரும் பார்ட்னர்ஷிப் போட்டு 159 ரன்கள் குவித்த நிலையில் ரிஷப் பண்ட் 93 ரன்கள் எடுத்து 7 ரன்களில் சதத்தை தவறவிட்டார். இதேபோல் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக இந்திய அணி 86.3 ஓவர்களில் 314 ரன்களில் ஆல்-அவுட்டானது. வங்கதேச அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் ஷகிப் அப் ஹசன் மற்றும் தைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதனையடுத்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 80 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், 3 நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடக்க வீரர் நஜ்முல் ஹொசைச் 5 ரன்களில் வெளியேற, 3 வதாக களமிறங்கிய மொமினுல் 5 ரன்களில் சிராஜ் பந்தில் பண்ட்டிடம் கேட்சானார். தொடர்ந்து கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்ஃபிகுர் ரஹ்மான் வெளியேறினார். மறுமுனையில், தொடக்க வீரர் ஜகிர் ஹாசன் நங்கூரம் போல் நின்று அரைசதம் கடந்து உமேஷ் பந்துவீச்சில் சிராஜிடம் கேட்சானார். 

145 ரன்கள் இலக்கு:

அடுத்து உள்ளே வந்த லிட்டன் தாஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துல் 73 ரன்களில் வெளியேற, மெகிடி டக் அவுட்டாகி நடையைக் கட்டினார். நுரூல் ஹாசன் 31 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 1 ரன்னுடம், கலீல் அஹமது 4 ரன்களுடனும் அவுட்டானார்கள். தஸ்கின் அஹமது மட்டும் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். 

இந்தியா வெற்றி:

இந்தியா- வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் 3ம் நாள் முடிவில் இந்திய அணி 45-4 என்ற மோசமான சூழ்நிலையில் இருந்தது. தொடர்ந்து 4வது நாள் தொடங்கிய இந்திய அணி, ஜெய்தேவ் உனத்கட்டை இழந்தது. 

அதன் தொடர்ச்சியாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 9 ரன்களை எடுத்து மெகிடி ஹாசன் பந்து வீச்சில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 74 ரன்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 

அதன்பிறகு, ஷ்ரேயஸ் ஐயர்- அஸ்வின் ஜோடி வங்கதேசத்தின் பந்துவீச்சில் அஸ்திவாரத்தை ஆட்ட தொடங்கினர். இருவரும் தேவையான நேரத்தில் பந்துகளை பவுண்டரிகளுக்கு ஓடவிட்டு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

தொடர்ந்து, இருவரும் சிறப்பாக ஆட இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ரவிசந்திரன் அஷ்வின் 42 ரன்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர் 29 ரன்களுடனும் அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். 

வங்கதேச அணியில் அதிகபட்சமாக மெகிடி ஹாசன் 5 விக்கெட்களும், கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
Embed widget