IND vs BAN 1st Test: டெஸ்ட் தொடரையாவது வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி..? வங்காள தேசத்துடன் நாளை பலப்பரீட்சை..!
IND vs BAN 1st Test: இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
IND vs BAN 1st Test: இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில் மூன்று ஒருநாள் போட்டி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நாளை டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளில் வங்காள தேச அணி 2 - 1 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியது. மேலும், மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷன் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எல்.ராகுல்
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முழுநேரக் கேப்டன் ரோக்த் சர்மாவுக்கு கையில் காயம் ஏற்படவே, அவர் வங்கதேச தொடரில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளார். இதனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து அணியை இந்த தொடரின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் வழிநடத்தி வந்தார். டெஸ்ட் போட்டியிலும் கே.எல்.ராகுலே அணியை வழிநடத்துவார் என பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.
IND vs BAN Test Head to Head
2000 ஆம் ஆண்டில் இருந்து இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இதில் இதுவரை மொத்தம் 11 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் இதுவரை வங்காளதேச அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. 11 போட்டிகளில் இந்திய அணி 9 போட்டிகளில் வென்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரினை வென்றுள்ள வேகத்தில் சொந்த மண்ணில் களமிறங்கும் வங்காளதேச அணி டெஸ்ட் போட்டியிலும் வென்று இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்ஹியம் அளிக்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
Excitement levels 🆙
— BCCI (@BCCI) December 13, 2022
Gearing up for the #BANvIND Test series starting tomorrow 👌#TeamIndia pic.twitter.com/YZD1A9N565
ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று நாடு திரும்ப, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி:
ஷுப்மான் கில், கே.எல். ராகுல் (கேப்டன்), சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஸ்ரீகர் பாரத், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி , அபிமன்யு ஈஸ்வரன், சௌரப் குமார்.
வங்கதேச தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள வங்கதேச அணி:
நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மஹ்முதுல் ஹசன் ஜாய், மொமினுல் ஹக், அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன்(கேப்டன்), லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், எபாடோட் ஹொசைன், கலீத் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத் ஹசன், யாசிர் அலி, ஜாகிர் ஹசன், ரெஜவுர் ரஹ்மான் ராஜா
இந்த போட்டி ஜஹூர் அகமது மைதானத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.